அமைச்சரானார் பொங்கலூர் பழனிச்சாமி
சென்னை:கோவை கிழக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவான பொங்கலூர் பழனிச்சாமி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் சிறு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி முன்னாள் அமைச்சரானபொங்கலூர் பழனிச்சாமி, மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையை ஏற்று ஆளுனர் பர்னாலா இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.அவருக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்துறையை இதுவரை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கவனித்து வந்தார். விரைவில் பொங்கலூர்பழனிச்சாமி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்.
பொங்கலூர் பழனிச்சாமி முந்தைய திமுக ஆட்சியில் வனத்துறை அமைச்சராக இருந்தவர். அவரது நியமனத்தின்மூலம் கோவை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
2 அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றம்:
இதேபோல இரு அமைச்சர்களின் இலாகாக்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப. தங்கவேலனிடம் இதுவரை இருந்து வந்த தரிசு நில மேம்பாட்டுத்துறைவேளாண்மை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் வசம் இருந்து வந்த அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை மின்துறை அமைச்சர் ஆர்க்காடுவீராசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொங்கலூர் பழனிச்சாமியின் சேர்க்கை மூலம் தமிழக அமைச்சரவை பலம் 31 ஆக உயர்ந்துள்ளது.
வாழ்க்கை குறிப்பு: 1944ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் செம்மெகவுண்டம்பாளையத்தில் பிறந்தவர் பழனிச்சாமி.தந்தையார் நாச்சித்து கவுண்டர், தாயார் பழனியம்மாள்.
பொங்கலூர் பழனிச்சாமியின் மனைவி விஜயலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில்மரணமடைந்தார். பாரி என்ற மகனும், இந்து என்ற மகளும் உள்ளனர்.
1971ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை பொங்கலூர் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்தார்பழனிச்சாமி. அதன் பின்னர் 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை சிங்காநல்லூர் எம்.எல்.ஏ.வாகதேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ல் நடந்த தேர்தலில் சிங்காநல்லூரில் தோல்வியடைந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications