பத்மினி-ஸ்ரீவித்யாவுக்கு இரங்கல் கூட்டம்
சென்னை:மறைந்த நடிகைகள் பத்மினி மற்றும் ஸ்ரீவித்யாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வருகிற 29ம் தேதிசென்னையில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் இணைந்துவெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான பத்மினி, ஸ்ரீவித்யா ஆகிய இரு கலை தாரகைகளுக்கு சங்கத்தின்சார்பில் வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சாமி சங்கரதாஸ்கலையரங்கத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் இசையாஞ்சலி, புஷ்பாஞ்சலி, புகழாஞ்சலி ஆகியவை நடைபெறுகிறது. இதில் திரையுலகைச்சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்படத்தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications