உள்ளாட்சி: 355 காலியிடங்களுக்கு டிச.ல் தேர்தல்?
சென்னை:தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 355 பதவியிடங்களுக்கு டிசம்பர் 15ம்தேதிக்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 1 லட்சத்து 31 ஆயிரம் பதவியிடங்களுக்கு சமீபத்தில் இரண்டு கட்டமாகதேர்தல் நடந்தது. இதில் 18,000 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற இடங்களுக்கு நடந்ததேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தத் தேர்தலில் 348 இடங்களுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதில் ஊரகப் பகுதிகளில் 318காலியிடங்களும், நகர்ப்பகுதிகளில் 30 காலியிடங்களும் உள்ளன. இதுதவிர தேர்தலுக்குப் பின்னர் 7 பேர்மரணமடைந்தனர். இதனால் மொத்தம் 355 பதவியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த 355 பதவியிடங்களுக்கும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம்தீர்மானித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யாத பல வார்டுகள் பொதுப் பிரிவிலிருந்து தாழ்த்தப்பட்டவகுப்பினருக்கு மாற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான் அந்த வார்டுகளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.348 வார்டுகளிலும் மனுதாக்கல் நடக்காததற்கு காரணம் என்ன என்று கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம்தேர்தல் ஆணையம் விளக்கம் கோரியுள்ளது. ஆட்சித் தலைவர்கள் அதற்கு பதில் அளித்த பின்னர் 355காலியிடங்களுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications