சென்னையை சுழற்றியடித்த பேய் மழை
சென்னை: சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு மழுவதும் பலத்த மழை பெய்ததால் நகரின் பலபகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. புறநகர்ப் பகுதிகளில் பலவற்றை தண்ணீர் சூழ ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின்பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
இந் நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழைபெய்து மக்களை பயமுறுத்தி விட்டது. விடிய விடிய பெய்த இந்த மழையால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர்ஆறு போல ஓடியது. பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்தன. மின் இணைப்பும் பல இடங்களில்துண்டிக்கப்பட்டது.
இந்த திடீர் கனத்த மழையால் வேலைக்குப் போய் விட்டு வீடு திரும்பியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.அண்ணா சாலை முதல் நகரின் முக்கியச் சாலைகள் அனைத்திலும் தண்ணீர் ஆறு போல ஓடியதால் போக்குவரத்துகடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை நகரை விட புறநகர்ப் பகுதிகளில்தான் மழை கொட்டித் தீர்த்து விட்டது. விடிய விடிய பெய்த இந்தமழையால் பல புறநகர்ப் பகுதிகள் நீரில் மிதக்கின்றன.
சென்னை நகரில் நேற்று இரவு 8 செமீ மழையும், புறநகரான மீனம்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் 14 செமீமழையும் பெய்துள்ளன.
ராமநாதபுரத்தில் கனமழை:
இதேபோல ராமநாதபுரத்திலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. நேற்று ஒரு நாள் மட்டும் இங்கு 280 மி.மீமழை பெய்துள்ளது. இதேபோல நாமக்கல், சீர்காழி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மயிலாடுதுறை,நன்னிலம், அறந்தாங்கி, விருதுநகர், செங்கல்பட்டு,
பூந்தமல்லி, கொரட்டூர், புதுச்சேரி, திருவையாறு, திருவாரூர், மேட்டுப்பாளையம், மருங்காபுரி, காரைக்குடி, கமுதி,கோவில்பட்டி, தொண்டி, மதுரை, தேவகோட்டை, இளையாங்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, அருப்புக்கோட்டை,சிவகாசி, சாத்தூர், சத்திரப்பட்டி, பழனி உள்ளிட்ட இடங்களிலும் கன மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தமிழக கடலோரப் பகுதிமுழுவதும் பரவியுள்ளதால் இன்னும் 2 நாட்களுக்கு பலத்த மழை தொடரும் எனத வானிலை ஆராய்ச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications