அதிமுக கோரிக்கை: சபாநாயகர் நிராகரிப்பு
சென்னை:மதுரை மேற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சண்முகத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றஅதிமுகவின் கோரிக்கையை சபாநாயகர் ஆவுடையப்பன் நிராகரித்துள்ளார்.
மதுரையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்குத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சண்முகம், ஸ்டாலினை பகிரங்கமாக பாராட்டிப் பேசினார். அப்படிப் பேசாவிட்டால்நான் மனிதனே அல்ல என்றும் முழங்கினார்.
சண்முகத்தின் இந்த அந்தர் பல்டி அதிமுகவினரிடையே கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இருப்பினும் அவரைகட்சியை விட்டு நீக்கினால் அது திமுகவுக்கு சாதகமாகி விடும் என்பதால் கட்சியை விட்டு நீக்காமல் உள்ளார்ஜெயலலிதா.
அதேசமயம், திமுகவுக்கு ஆதரவாக பேசியதால் சண்முகம் மீது கட்சி தாவல் தடைச் சட்டப்படி நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று அதிமுக கோரி வருகிறது. இதுதொடர்பாக சட்டசபை அதிமுக துணைத் தலைவர்ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் ஆவுடையப்பனுக்கு மனு ஒன்றை அளித்தார்.
அதில், அரசியல் சட்டத்தின் 10வது அட்டவணையில் பிரிவு 2 (1) ஏ-வின் படி ஒரு கட்சியைச் சேர்ந்தஉறுப்பினர், அக்கட்சிக் கொள்கைக்கு முரணாக கருத்து கூறவோ, பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கவோ,அறிக்கை விடவோ கூடாது. அப்படிச் செய்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சட்டசபைக்கு வெளியே எஸ்.வி.சண்முகம், அதிமுகவின் கொள்கைக்கு விரோதமாக பேசியுள்ளார்.எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் மனுவைப் பரிசீலித்த சபாநாயகர் ஆவுடையப்பன் தனது தீர்ப்பை அளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் பன்னீர் செல்வத்துக்கு அனுப்பியுள்ள பதிலில், தமிழக சட்டசபை தகுதி நீக்கசட்டவிதிமுறை 6 (6) மற்றும் 7 ஆகிய பிரிவுகளின் கீழ், தங்களது மனு முறையாக வழங்கப்படவில்லை.
தங்களது மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் முறையாக கையொப்பமிடாமல், சான்றுஅளிக்கப்படாமல் உள்ளன. எனவே இந்த மனுவை நிராகரிக்கும் உரிமை சபாநாயகருக்கு உள்ளது.
மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சண்முகம், அவர் சார்ந்த கட்சியிலிருந்து ராஜினாமா செய்யவும் இலலை,அதுதொடர்பாக எந்தக் கடிதத்தையும் எனக்கு அளிக்கவும் இல்லை.
மேலும், சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின்போது அவர் கொறடா உத்தரவை மீறி வேறு கட்சிக்குவாக்களிக்கவும் இல்லை, வாக்களிக்காமல் புறக்கணிக்கவும் இல்லை. எனவே உறுப்பினர் சண்முகத்தை தகுதிநீக்கம் செய்யும் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார் ஆவுடையப்பன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications