ஜெவுக்கு மக்கள் பதிலளிப்பார்கள்: விஜயகாந்த்
சென்னை:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறும் புகார்களுக்கு தமிழக மக்கள் தக்கபதில் அளிப்பார்கள் என்று தேமுதிக தலைவரான விஜயகாந்த் கூறியுள்ளார்.
விஜயகாந்த்தை விமர்சித்து அதிமுக தலைமை நிலையச் செயலாளர்செங்கோட்டையன் அறிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் விஜயகாந்த் ஒரு பசில்அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், தேமுதிக சமீபத்தில நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப் பெரிய வளர்ச்சியைஅடைந்து, தமிழக மக்களின் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
சட்டசபைத் தேர்தலிலும், மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சித்தேர்லிலும் தனித்து நின்றே தேர்தலை சந்தித்தது தேமுதிக. மதுரை மத்திய தொகுதியில்20 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளோம்.
இரவு, பகல் என்று பார்க்காது, கழகத்தின் வெற்றி ஒன்றே லட்சியம் என்பதைநினைவில் இருத்தி, தேனீக்களைப் போல சுறுசுறுப்புடன் தேர்தல் பணியாற்றிய கழகத்தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த கழகத் தொண்டர்களுக்கு நான்கூறிக் கொள்வது என்னவென்றால், இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு அறிகுறி.எனவே தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தது தற்காலிகமானது. இது முடிவல்ல.
நாளை நடைபெறப் போகும் நிகழ்ச்சிகள் நமக்கு வெற்றிப் பாதையை தேடித் தரும்.எனவே தோல்வியைக் கண்டு துவளாமல், பெற்ற வெற்றியினைப் பேணிக் காத்து,சமுதாயப் பணி ஆற்றிட வேண்டும்.
நம்மை சில விஷமிகள் சீண்டிப் பார்க்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு நாம் பதில்சொல்லத் தேவையில்லை. காலமும், தமிழக மக்களும் அவர்களுக்கு சரியானமுறையில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
எனவே கழகத் தோழர்கள் எந்தவிதமான எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கையிலும்ஈடுபட வேண்டாம் என கோரியுள்ளார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications