மீண்டும் ஜாமீன் கோரி அப்பு மனு
சென்னை:சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கி கைதாகியுள்ள கூலிப் படைத் தலைவன் அப்பு,ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அப்பு கைதுசெய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரி அவர்உயர்நீதிமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அப்பு அணுகினார். அவரது மனுவை விசாரித்தஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தையே அணுகி அப்பு ஜாமீன் பெறலாம் என கூறிவிட்டது.
இதையடுத்து 3வது முறையாக தற்போது மீண்டும் ஜாமீன் கோரி அப்பு சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன்னோடு இந்த வழக்கில்கைதானவர்கள் ஜாமீனில் விடுதலையாகி விட்டதால் தனக்கும் ஜாமீன் தர வேண்டும்என அப்பு கோரியுள்ளார்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications