திருச்சி-சாருபாலா: கோவை-வெங்கடாச்சலம்
டெல்லி:கோவை, திருச்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின்பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பதிவிகளைப் பிடிக்க பல காங்கிரஸ்கோஷ்டிகளும் முட்டி மோதின. இதையடுத்து டெல்லியில் இருந்து வேட்பாளர்களின்பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கோவையும், திருச்சியும்ஒதுக்கப்பட்டுள்ளன. மேயர் பதவிக்கு யார் போட்டியிடப் போவது என்ற எதிர்பார்ப்புகாங்கிரஸார் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் வேட்பாளர்கள் பெயரைகாங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரான வீரப்பமொய்லி, வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டுள்ளார். அதன்படி திருச்சியில்,தற்போதைய மேயர் சாருபாலா தொண்டைமான் மீண்டும் மேயர் பதவிக்குநிறுத்தப்படுகிறார்.
கடந்த தேர்தலில் தமாகா சார்பில் போட்டியிட்டு மேயரானவர் சாருபாலா. மத்தியஅமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்.
கோவை மேயராக காலனி வெங்கடாசலம் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் முன்னாள்அமைச்சர் ஆர்.பிரபுவின் ஆதரவாளர்.
சோனியா காந்தியின் ஒப்புதலுடன் இவர்களது பெயரை அறிவிப்பதாக மொய்லிதனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த இரு மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவியை திமுகவே எடுத்துக்கொண்டுள்ளது. மற்ற நான்கு மாநகராட்சிகளிலும் மேயர் மற்றும் துணை மேயர்பதவிகளையும் திமுக தன் வசமே வைத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications