எம்எல்ஏவாக பதவியேற்றார் கெளஸ் பாட்ஷா
சென்னை:மதுரை மாநகரை தொழில் வளர்ச்சி மிக்க நகராக மாற்ற பாடுபடப் போவதாக மதுரைமத்திய தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்று பதவியேற்றுக்கொண்ட கெளஸ் பாட்ஷா கூறினார்.
மதுரை மத்திய தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டகெளஸ் பாட்ஷா வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று காலை அவர் எம்.எல்.ஏ.வாகபதவியேற்றுக் கொண்டார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ஆவுடையப்பன் அறையில் நடந்தபதவியேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் ஆவுடையப்பன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதிஇளம்வழுதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்றுக்கொண்ட பாட்ஷாவுக்கு கருணாநிதி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பாட்ஷா பேசுகையில், மதுரையை ஆளும் அன்னைமீனாட்சியம்மன் கோவில் உள்ள மதுரை மத்திய தொகுதியில், மீனாட்சி அம்மன்கோவிலைச் சுற்றிலும் உள்ள சுகாதார சீர்கேடுகளைப் போக்க பாடுபடுவேன். இதுவேஎனது முதல் வாக்குறுதி.
மதுரை நகரை தொழில் வளம் மிக்க நகராக மாற்ற பாடுபடுவேன். மதுரை நகரில்டைடல் பூங்கா, வைகை 2ம் கட்ட குடிநீர்த் திட்டம், மற்றும் தொழிற்சாலைகளைகொண்டு வர தீவிரமாக முயற்சிப்பேன் என்றார்.
அக். 29ல் பழனிச்சாமி பதவியேற்பு:
இதற்கிடையே ஊரக தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பொங்கலூர் பழனிச்சாமி வரும் 29ம் தேதி அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.
அமைச்சரவையில் பொங்கலூர் பழனிச்சாமி புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொள்கிறார். மாலை 4மணிக்கு ஆளுனர் மாளிகையில் நடைபெறும் எளிய விழாவில் ஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலா, பழனிச்சாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
இந் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவால் 30 ஆக குறைந்தஅமைச்சர்கள் எண்ணிக்கை, பழனிச்சாமியின் சேர்க்கையால் மீண்டும் 31 ஆக உயர்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications