ஜெ புகார்-தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்கு தேர்தல் ஆணையத்தின்விளக்கம் என்ன என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்:

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில்முறைகேடுகள் நடந்துள்ளதாக ஜெயலலிதா புகார் கூறியுள்ளார்.

மத்திய தேர்தல் ஆணையத்தின் மீது முன்னாள் முதல்வர் ஒருவர் சாட்டியுள்ள மிகப்பெரிய குற்றச்சாட்டு இது. சட்டசபைத் தேர்தலின்போதும் இதேபோல ஜெயலலிதாபுகார் கூறினார். அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இப்போதும்அதேபோன்ற புகாரை அவர் எழுப்பியுள்ளார்.

இதற்கும் தேர்தல் ஆணையம்தான் பதில் தர வேண்டும். வாக்கு இயந்திரத்தில்முறைகேடுகள் நடந்தது என்றால், கடந்த சட்டசபைத் தேர்தலில் அறுபதுக்கு மேற்பட்டஇடங்களில், ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுகவினர் எப்படி வெற்றி பெற்றார்கள்?

அது மாத்திரமல்ல, வாக்குப் பதிவு இயந்திரங்கள் இல்லாமல் ஓட்டுச் சீட்டு மூலம்உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தபோது, ஜெயலலிதாவின் கட்சி தோல்விஅடைந்ததற்கு என்ன காரணம்?

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஜெயலலிதா இதுபோல புகார் கூறுவது வழக்கமானதுஎன்று எண்ணிக் கொண்டு தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டைஅலட்சியப்படுத்தி விட்டது போலும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சென்னை மியூசிக் அகாடமியில் துக்ளக் சோ, இரா. செழியன் ஆகியோர் கலந்துகொள்ளவிருந்த உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பான கலந்துரையாடல்நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்த கேள்விக்கு கருணாநிதிஅளித்த பதில்:

பேச்சுரிமைகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தால் அது தவறு. ஆனால் சென்னைகாவல்துறையினர் அதுபற்றி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.கூட்டத்தைத் தடுக்கவும் இல்லை, அனுமதி மறுக்கவும் இல்லை என்று போலீஸ்அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார்.

எம்.பிக்களாக இரண்டு மூன்று முறை பதவிகளில் இருந்தவர்கள் இதை ஏன் இவ்வளவுபெரிய சர்ச்சையாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+