5 மாநகர மேயர்கள் நாளை தேர்வு-பதவியேற்பு
மதுரை:மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகளின் மேயர்கள், துணை மேயர்கள் தேர்தல்நாளை நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த 25ம் தேதிபதவியேற்றனர். இதைத் தொடர்ந்து சென்னை நீங்கலாக மற்ற 5 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் துணைமேயர்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள்ஆகியோருக்கான தேர்தல் 28ம் தேதியான நாளை நடைபெறுகிறது.
சென்னை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை திமுக எடுத்துக் கொண்டுள்ளது.சென்னை மேயர் பதவிக்கு மா.சுப்பரமணியம், துணை மேயராக சத்தியபாமா, மதுரை மேயராக தேன்மொழிகோபிநாதன், துணை மேயராக பி.எம்.மன்னன்,
சேலம் மேயர் பதவிக்கு ரேகா பிரியதர்ஷினி, துணை மேயராக பன்னீர் செல்வம், நெல்லை மேயராகஏ.எல்.சுப்ரமணியன், துணை மேயராக முத்துராமலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் திருச்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மேயர் வேட்பாளராககாலனி வெங்கடாச்சலமும், திருச்சியில் தற்போதைய மேயர் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகிறார்கள்.கோவை துணை மேயராக திமுகவின் கார்த்திக், திருச்சி துணை மேயராக திமுகவின் அன்பழகன் ஆகியோர்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மேயர் தேர்தல் 29ம் தேதி நடைபெறுகிறது. மற்ற 5 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் துணை மேயர்தேர்தல் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு மேயர் தேர்தலும், 11 மணிக்கு துணை மேயர் தேர்தலும்நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை காலை நடைபெறுகிறது. மேயர், துணை மேயர் தேர்தலுக்கு போட்டிஇருக்காது என்ற நிலை இருப்பதால் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் மேயர் மற்றும் துணை மேயர்வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர்.
திதேர்தல் முடிந்ததுமே மேயர் மற்றும் துணை மேயர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள். மேயர், துணை மேயர்,நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் தேர்தலையொட்டி அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிஅலுவலகங்களும் விழாக் கோலம் பூண்டுள்ளன.












Click it and Unblock the Notifications