சென்னையில் பேய் மழை-பள்ளி, கல்லூரிகள் மூடல்
சென்னை: சென்னை நகரில் இன்று காலை முதல் பலத்த இடி, மின்னலுடன் பேய் மழை பெய்து வருகிறது. இதனால் நகரின்பல பகுதிகளில் மழை நீர் வெள்ளமென ஓடி வருகிறது. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அப்படியே நிலை கொண்டிருப்பதால்கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.
நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோரப் பகுதிளுக்கு மேல் அழுத்தமாக வியாபித்தது. இதனால்நேற்று மாலை முதல் கடலோரத் தமிழகத்தில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழையால் கடலோர தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும்,புதுச்சேரியிலும் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந் நிலையில் இன்றும் காலை முதல் கன மழைபெய்து வருகிறது.பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தலைநகர் சென்னை தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மழை இன்னும் 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.கடலோர தமிழகம் மற்றும் தமிழகத்தின் அனேக இடங்களில் இடியுடன் கூடிய கன மழை அல்லது பலத்த மழைபெய்யபம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கனத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடி வருவதால், போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில்கடும் வானக நெரிசல் ஏற்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காலை நேரத்தில் அலுவலகம்செல்வோர்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள்.
சென்னை நகரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும், நாளையும் விடுமறைவிடப்பட்டுள்ளது. கன மழை காரணமாக சென்னையில் 2 பேர் இறந்துள்ளனர்.
சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே 70 வயதுப் பெண் இறந்து கிடந்தார். கடும் குளிரில் அவர்இறந்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது. அவர் யார் என்பது தெரியவில்லை. இதேபோல சென்டிரல் ரயில் நிலையமஅருகே 40 வயது ஆண் ஒருவரது பிணம் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் தாமரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 15 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னைவிமான நிலையம், செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 14 செமீ மழையும், தாம்பரம், பான்னேரி, திருவள்ளூர்ஆகிய இடங்களில் 11 செமீ மழையும் பெய்துள்ளது.
சீர்காழி, ராமநாதபுரம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது.திருவிடைமருதூர், செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் 9 செமீ மழையும், காட்டுமன்னார் கோவில், நன்னிலம்,சென்னை நகரம், திருவாரூர், சோழரவரம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ மழையும், செங்கல்பட்டு,கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் தலா 7 செமீமழையும் பெய்தூள்ளது.
சோழந்தானில் 3 பேர் பலி:
சோழவந்தானில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அந்த வீட்டைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாகபலியானார்கள்.
சுனாமி நிவாரண வீடுகள் இடிந்தன:
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால்அந்த மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பும் கூடவே சேர்ந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.கன மழையால் கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர் குடியிருப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பலமீனவர் குடியிருப்புகள் நீரில் மிதக்கின்றன.
இதுதவிர சுனாமியில் சிக்கி வீடிழந்த மீனவர்களுக்கு கட்டிக் கொடுக்கப்பட்ட பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.இதனால் அங்கு குடியிருந்தவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
மீனவர்களின் கருவாட்டுக் குவியல்கள் மழை நீரில் நனைந்து விட்டதால் மீனவர்கள் கடும் நஷ்டத்திற்குஆளாகியுள்ளனர். திடீர் குப்பம் மீனவர் குடியிருப்பில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அங்குவசித்து வருபவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடுவையாறு, தேவ நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு கரைகளைப் பலப்படுத்தா விட்டால்பல்வேறு மீனவர் குடியிருப்புகள் மூழ்கும் அபாயம் இருப்பதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
விமானப் போக்குவரத்து பாதிப்பு:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக விமானப் போக்குவரத்தும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்தும் முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளது.வெளியில் நடந்து செல்லவே முடியாத அளவுக்கு மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்த மழைக்கு விமானப் போக்குவரத்தும் தப்பவில்லை. தொடர்ந்து பேய் மழை பெய்து வருவதால்விமானங்கள் வந்து செல்வதில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய பலவிமானங்கள் கிளம்ப முடியாமல் ரத்து செய்யப்பட்டுவிட்டன. அதேபோல சென்னைக்கு வர வேண்டிய பலவிமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications