இன்போசிஸை குறி வைத்த தீவிரவாதிகள்
மைசூர்:மைசூரில் போலீஸாருடன் நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் பிடிபட்ட 2 பாகிஸ்தான்தீவிரவாதிகளும் அல்-பதர் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும், தென்னிந்தியாவில் பல்வேறுபயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட இந்த அமைப்பினர் திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மைசூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை கர்நாடக மாநிலத்திலேயே மிகப் பெரியஅணையாகும். கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு இங்கிருந்துவினியோகிக்கப்படும் தண்ணீரே உயிர் நாடியாக உள்ளது.
இந் நிலையில் கே.ஆர்.எஸ். அணை அருகே நேற்று இரவு போலீஸார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போதுமோட்டார் சைக்கிளில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்தனர். இதையடுத்து இருவரையும் நிறுத்திவிசாரிக்க போலீஸார் முயன்றனர்.
ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வண்டியை நிறுத்தாமல், போலீஸாரை நோக்கி ஏ.கே.47துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து போலீஸாரும் பதிலுக்கு திருப்பிச் சுட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும்இடையே நீண்ட நேரம் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்த சண்டைக்குப் பின்னர் மோட்டார் சைக்கிள் வாலிபர்கள் சரணடைய முன் வந்தனர். இதைத் தொடர்ந்துஅவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனத் தெரியவந்தது. இருவரடமிருந்தும் பெங்களூர் விதான் செளதா, இன்போசிஸ் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கியகட்டடங்களின் வரைபடங்கள் இருந்தன.
மைசூர் அரண்மனை, கே.ஆர்.எஸ். அணை ஆகியவற்றை குண்டு வைத்துத் தகர்க்கும் நோக்குடன் மைசூருக்குவந்ததாகவும் அவர்கள் தெவித்தனர். அவர்களோடு மேலும் சிலரும் வந்திருக்கக் கூடும் என்பதால் மைசூர்,மாண்டியா மற்றும் கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
கைதான தீவிரவாதிகளிடமிருந்து சாட்டிலைட் போன், கைத் துப்பாக்கி, லேப் டாப் கம்ப்யூட்டர் ஆகியவையும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பிடிபட்ட இரு தீவிரவாதிகளிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட இருவரும் பாகிஸ்தானைச்சேர்ந்த அல்-பதர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. அவர்களில் ஒருவரது பெயர்முகம்மது அலி ஹூசேன். இவர் கராச்சியைச் சேர்ந்தவர். இன்னொருவரின் பெயர் முகம்மது பர்ஹத். இவர்மான்ஷேர் என்ற ஊரைச் சேர்ந்தவர்.
தீவிரவாதிகள் பிடிபட்டது குறித்து பெங்களூரில் கர்நாடக டிஜிபி சியால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பெங்களூரில் விதான செளதா, இன்போசிஸ் உள்ளிட்ட முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்,கே.ஆர்.எஸ். அணை உள்ளிட்ட முக்கிய இடங்களை குண்டு வைத்துத் தகர்க்கும் நோக்குடன் இவர்கள்வந்துள்ளனர்.
கர்நாடகத்தில் உள்ள முக்கிய நிறுவனங்கள், இடங்களை தீவிரவாதிகள் தாக்கலாம் என முன்கூட்டியேஎங்களுக்கு மத்திய உளவுப் பிரிவு எச்சரித்திருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் போலீஸார் உஷார் நிலையில்வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நிலையில்தான் இந்த இருவரும் மைசூர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம்தவிர்க்கப்பட்டுள்ளது. இருவரும் சமீபத்தில் மைசூருக்கு வந்து அங்கு ஒரு கடையை விலைக்கு வாங்கியுள்ளனர்.வியாபாரிகள் போல வேடமிட்டுக் கொண்டு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
இந்த இருவருக்கும் கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த இந்திய அறிவியல் கழக தீவிரவாதத் தாக்குதலில்தொடர்பு கிடையாது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் அல்-பதர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றார் சியால்.
அல்-பதர் அமைப்பு தென்னிந்தியா முழுவதும் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டதும் இந்த கைதுமூலம் தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மைசூரில் தீவிரவாதிகள் பிடிபட்டதைத் தொடர்ந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications