வங்கதேசத்தில் பயங்கர வன்முறை!

Subscribe to Oneindia Tamil

Bangladesh Prime Minister Khaleda Zia டாக்கா:வங்கதேச பிரதமர் கலீதா ஜியா பதவி விலகியதைத் தொடர்ந்து அங்கு வன்முறைவெடித்துள்ளது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

வங்ககதேச பிரதமர் கலீதா ஜியாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.இதையடுத்து நேற்று மாலை அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்தினார். அதன் பின்னர் அவரும், அவரது அமைச்சரவையும் பதவியிலிருந்துவிலகினர்.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் கலவரம் மூண்டது. பல்வேறு நகரங்களில்கலீதா ஜியாவின் கட்சியான வங்கதேச தேசிய கட்சியின் அலுவலகள் குறி வைத்துதாக்கப்பட்டன.

ஆளுங்கட்சி அமைச்சர்கள் பலரது வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. தலைநகர்டாக்காவில் பல வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறைச்சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Riots in Bangladeshஇன்று அதிகாலை வரை இந்த கலவரமும், வன்முறையும் நீடித்தன. இன்று காலைமுதல் தலைநகர் டாக்காவில் பெரும் அமைதி நிலவுகிறது. வன்முறைச் சம்பவங்கள்சற்றே ஓய்ந்துள்ளன. இருப்பினும் அதிக வாகனங்களை சாலைகளில் காணமுடியவில்லை. நகர் முழுவதும் ராணுவம், கலவரத் தடுப்புப் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஏற்படுத்தப்படும், அதற்குமுன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.என்.ஹசன் தலைமை வகிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டது. இதற்கு முக்கிய எதிர்க்கட்சியான அவாமி லீக் கட்சியின் தலைவர்ஷேக் ஹசீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா தலைமையில் 14 கட்சிகள் கொண்ட கூட்டணிஅமைக்கப்பட்டுள்ளது. ஹசன் இடைக்கால அரசின் நிர்வாகியாக பதவியேற்பதற்குஎதிர்ப்பு தெரிவித்து ஹசீனா அளித்துள்ள பேட்டியில், ஆளுங்கட்சிக்கும், ஹசனுக்கும்இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே ஹசன் இடைக்கால அரசுக்குத்தலைமை வகிகக் கூடாது.

எங்களது எதிர்ப்பையும் மீறி ஹசன் பதவியேற்றால் நாட்டையே ஸ்தம்பிக்க செய்துவிடுவோம். ஜனாதிபதி இஜாஹுதின் அகமது, ஹசனுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும்.

நிலைமையை புரிந்து கொண்டு ஹசனும் பதவியேற்கக் கூடாது. மாட்டார் எனநம்புகிறோம் என்றார் ஹசீனா.

இந்த நிலையில் கே.எம்.ஹசன் பதவியேற்கும் நிலையில் இல்லை என்றும் அவரதுஉடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.இதனால் வங்கதேசத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஹசன் இன்று இடைக்கால அரசின் நிர்வாகியாக பதவியேற்பதாக இருந்தது. ஆனால்அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழ்நிலையில், அவர் உடல் நலம் அரசுப்பொறுப்பை ஏற்கும் அளவுக்கு பொருத்தமாக இல்லை என்று ஜனாதிபதி மாளிகைசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹசன் உடல் நலம் பொருத்தமாக இல்லை என்றும் அவர் பதவியேற்கும் நாள் குறித்துஇன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதி மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் இடைக்கால அரசுக்கத் தலைமை வகிக்க ஹசன்தயங்குவதாக கூறப்படுகிறது. எனவே அவருக்குப் பதில் வேறு யாராவது இடைக்காலஅரசு அமைக்க அழைக்கப்படுவார்களா என்பது குறித்து உடனடியாகத்தெரியவில்லை.

வங்கதேச நாடாளுமன்றத்திற்கு ஜனவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.அதுவரை நாட்டை நிர்வகிக்க இடைக்கால அரசு நியமிக்கப்பட்டாக வேண்டும்.ஆனால் அதிலும் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும்குழப்பம் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+