போலீஸ்தொல்லையால் தொண்டர் சாவு: ஜெ
சென்னை:போலீஸார் தன் மீது வழக்குப் போட்டு சித்திரவதை செய்வார்கள் என பயந்த அதிமுகதொண்டர் மாரடைப்பால் மரணமடைந்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர்ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
ஓட்டேரியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் வடிவேலு மீது திமுகவினரின் தூண்டுதல்காரணமாக போலீசார் பொய் வழக்குப் போட்டுள்ளனர்.
தன்னைக் கைது செய்ய போலீஸார் வரவிருப்பதை அறிந்த வடிவேலு அதிர்ச்சியில்மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் மரணமடைந்து விட்டார்.
திமுகவினர் துணையுடன் போலீஸார் நடத்தும் இந்த வெறியாட்டத்தால், அப்பாவிஅதிமுக தொண்டர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸார் தன்னை சித்திரவதைப்படுத்துவர் என்று பயந்து மாரடைப்பால் இறந்தவடிவேலுவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு குடும்ப நிதியாக ரூ. 50,000 வழங்கஉத்தரவிட்டுள்ளேன்.
அக்டோபர் 13ம் தேதி நடந்த வன்முறை கலந்த மாநகராட்சி தேர்தலுக்குப் பின்னர்சென்னை நகரில் போலீஸார் அதிமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டுமனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்து வருகின்றனர்.
போலீஸாரின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறேன்.அதிமுக தொண்டர்களை பழிவாங்கும் போக்கை உடனடியாக காவல்துறையினர்கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு:
இதற்கிடையில் போலீஸ் கெடுபிடி காரணமாக அதிமுக தொண்டர் வடிவேலு மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுவது குறித்து வருவாய் கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடிவேலுவின் மனைவி உஷா கூறுகையில், போலீஸார் வீட்டுக்கு வந்து எனது கணவரின் சட்டையைப் பிடித்து இழுத்தனர். இதில் பயந்தேஅவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூறியுள்ளார்.
ஆனால் உஷாவின் புகாரை ஓட்டேரி போலீஸார் மறுத்துள்ளனர். அக்டோபர் 13ம் தேதி நடந்த வன்முறை கலந்தமாநகராட்சி தேர்தலின் போது பஸ் உடைக்கப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளோம்.வடிவேலுவை இந்த வழக்கில் கைது செய்யவில்லை. ஆனால், அவரை நாங்கள் கைது செய்யப் போவதாகஅப்பகுதியில் சிலர் வதந்தி பரப்பியுள்ளனர். அதில் ஏற்பட்ட அதிர்ச்சியில்தான் வடிவேலு இறந்துள்ளார்.
வடிவேலு இறந்ததற்கும், போலீஸாருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications