ஜெ சொத்து வழக்கு: நவ-25க்கு ஒத்திவைப்பு
பெங்களூர்:அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 25ம் தேதிக்கு பெங்களூர்தனி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கும்,லண்டன் ஹோட்டல் வழக்கும் விசாரணையில் உள்ளது. இந்த இரு வழக்கையும் சேர்த்து விசாரிக்க தனிநீதிமன்றம் முடிவு செய்தது.
இதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவைவிசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கு விசாரணைக்க இடைக்காலத் தடை விதித்தது.
இந்த நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்றம்விதித்துள்ள இடைக்காலத் தடை நீக்கப்படாதை சுட்டிக் காட்டிய நீதிபதி முனோலி, அரசு வழக்கறிஞர்ஆச்சார்யாவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது வழக்கை நவம்பர் மாதம் வரை தள்ளி வைக்கலாம் என ஆச்சார்யா யோசனை தெரிவித்தார். ஆனால்ஜெயலலிதா உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், டிசம்பர் மாதம் வரை வழக்கை தள்ளிவைக்க கோரினார்.
இரு தரப்பு வழக்கறிஞர்களின் கோரிக்கைகளையும் பரிசீலித்த நீதிபதி முனோலி, நவம்பர் 25ம் தேதிக்கு வழக்குவிசாரணையை தள்ளி வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications