இலங்கை அரசு-புலிகள் இன்று பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா:இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளின் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தை இன்று ஜெனீவாவில் தொடங்குகிறது.

ண்இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்து, போர் நிறுத்தம்மீறப்பட்டு இரு தரப்பினரும் கடந்த 2 மாதங்களாக கடும் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து நார்வே தூதுக் குழு அமைதியைஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. இந்த முயற்சியின் விளைவாக இரு தரப்பினரும் மீண்டும்பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து எட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் இலங்கை அரசுப் பிரதிநிதிகளும், புலிகள் இயக்கப்பிரதிநிதிகளும் ஜெனீவாவில் இன்று மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக அரசுத் தரப்பில்அமைச்சர் நிர்மல் ஸ்ரீபாலா டிசில்வா தலைமயிலும், சுப.தமிழ்ச் செல்வன் தலைமையில் விடுதலைப் புலிகள்குழுவினரும் ஜெனீவா வந்துள்ளனர். இன்றும், நாளையும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

பேச்சுவார்த்தை தொடங்கவுள்ள நிலையில், விடுதலைப் புலிகள் நேற்று முக்கிய கோரிக்கைகள் சிலவற்றைமுன்வைத்துள்ளனர். அவற்றை ஜெனீவா பேச்சுவார்த்தையின் போது நிறைவேற்ற இலங்கை அரசுமுன்வராவிட்டால் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு புலிகள் இயக்கம் சம்மதிக்காது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

புலிகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று யாழ்ப்பாணத்திற்கும், நாட்டின் பிற பகுதிகளுக்குமான முக்கிய சாலைபோக்குவரத்தை திறந்து விட வேண்டும் என்பது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த சாலையை இலங்கை அரசுமூடியது. இதனால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சாலையை உடனடிாயக இலங்கை அரசு திறந்து விட வேண்டும் என புலிகள் கோரியுள்ளனர். இதுகுறித்துஇலங்கை அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் ரம்புகவெல்லா கூறுகையில், எதிர்காலப் பேச்சுவார்த்தைகளை,நெடுஞ்சாலைத் திறப்புடன் சம்பந்தப்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது. இது மிரட்டல் நாடகம்.

விடுதலைப் புலிகள் ஊடுறுவலைத் தடுக்கவும், தாக்குதலைத் தவிர்க்கவுமே நெடுஞ்சாலை மூடப்பட்டது என்றார்.

இந்த சாலை மூடப்பட்டதால், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின்விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம். விமானம் மற்றும் கடல் மார்க்கமாகவேவிநியோகம் நடந்து வருகிறது.

இதற்கிடையே, இன்று தொடங்கும் பேச்சுவார்த்தையின்போது தேர்தல், வளர்ச்சித் திட்டப் பணிகள், சிறார் வீரர்கள்குறித்த பிரச்சினை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக பலித கொஹனோகூறியுள்ளார்.

அதேசமயம், புலிகள் தரப்பு வேறு ஒரு அஜென்டாவுடன் ஜெனீவாவுக்கு வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள்உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்துத்தான் முக்கியமாக பேசப்பட வேண்டும் என புலிகள் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தயா மாஸ்டர் கூறுகிறார்.

இன்று தொடங்கும் பேச்சுவார்த்தையில் என்ன மாதிரியான முடிவுகள் எட்டப்படவுள்ளன என்பது இலங்கையில்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+