5 மாநகர மேயர்கள் இன்று பதவியேற்பு
மதுரை:மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகளின் மேயர்கள், துணை மேயர்கள் தேர்தல்இன்று நடைபெறுகிறது.
சென்னை நீங்கலாக மற்ற 5 மாநகராட்சிகளின் மேயர் மற்றும் துணை மேயர்கள், நகராட்சிகள், பேரூராட்சிகள்ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகியோருக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
சென்னை மேயர் பதவிக்கு திமுகவின் மா.சுப்பிரமணியம், துணை மேயராக சத்தியபாமா, மதுரை மேயராகதிமுகவின் தேன்மொழி கோபிநாதன், துணை மேயராக பி.எம்.மன்னன்,
சேலம் மேயர் பதவிக்கு திமுகவின் ரேகா பிரியதர்ஷினி, துணை மேயராக பன்னீர் செல்வம், நெல்லை மேயராகதிமுகவின் ஏ.எல்.சுப்ரமணியன், துணை மேயராக முத்துராமலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாகஅறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மற்றும் திருச்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மேயர் வேட்பாளராககாலனி வெங்கடாச்சலமும், திருச்சியில் தற்போதைய மேயர் சாருபாலா தொண்டைமானும் போட்டியிடுகிறார்கள்.கோவை துணை மேயராக திமுகவின் கார்த்திக், திருச்சி துணை மேயராக திமுகவின் அன்பழகன் ஆகியோர்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து முதலில் மேயர் தேர்தலும், 11மணிக்கு அடுத்து துணை மேயர் தேர்தலும் நடைபெறவுள்ளது.
மேயர், துணை மேயர் தேர்தலுக்கு போட்டி இருக்காது என்ற நிலை இருப்பதால் திமுக மற்றும் காங்கிரஸ்கட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர். தேர்தல் முடிந்ததுமேமேயர் மற்றும் துணை மேயர்கள் பதவியேற்றுக் கொள்வார்கள்.
சென்னை மேயர் தேர்தல் 29ம் தேதி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications