புத்திசாலி போலீஸ்: தப்பிச் சென்ற திருடன்!
சென்னை:பலத்த சப்தத்துடன் சைரன் முழங்க போலீஸார் வந்ததால், வீட்டுக்குள் மறைந்திருந்த திருடன் உஷாராகி தப்பிவிட்டான்.
சென்னை புறநகரான கொட்டிவாக்கம் கண்ணப்பன் நகரில் திருவேங்கடம் என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர்வசித்து வருகிறார். வீட்டின் மேல் தளத்தில் திருவேங்கடம் தனது மனைவியுடன் வசிக்கிறார். கீழ் தளத்தில் அவரதுமகள் கணவருடன் வசிக்கிறார்.
மனைவியுடன் திருவேங்கடம் திருவண்ணாமலைக்குப் போயிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலைஇரண்டரை மணியளவில் வீட்டின் மாடியில் சத்தம் கேட்டுள்ளது. இதனால் கீழ் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்ததிருவேங்கடத்தின் மகள் சத்தம் கேட்டு விழித்தார்.
திருடன் புகுந்திருக்கலாம் என நினைத்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியை நாடலாம் என எண்ணி கதவைத்திறக்க முயன்றார். ஆனால் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் தொலைபேசி மூலம் அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களை தொடர்பு கொண்டு உஷார்படுத்தினார்.
அவர்களும் வீட்டை விட்டு வெளியே வர முயன்றனர். ஆனால் அனைவரது வீடுகளும் வெளிப்புறமாகபூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். பலத்த சப்தத்துடன்சைரன் எழுப்ப போலீஸார் வந்ததால் அந்தப் பகுதியே பரபரப்பானது.
மேல் மாடிக்குச் சென்ற போலீஸார் கதவைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.அப்போது கதவை உடைத்து உள்ளே போக லாமேக் முடிவு செய்தார். சினிமா பாணியில் வேகமாக கதவைமோதி உள்ளே போக முயன்றபோது, அவரது கைவிரல் கதவு இடுக்கில் சிக்கி துண்டானது.
வலியால் துடித்த அவர் அதைப் பொருட்படுத்தாமல், ரத்தம் கொட்ட கொட்ட வீட்டுக்குள் நுழைந்து பார்த்தார்.ஆனால் யாரும் இல்லை. சமையலறை வென்டிலேட்டர் உடைந்து கிடந்ததைப் போலீஸார் பார்த்தனர். அதன்வழியாக திருடன் தப்பி விட்டது தெரிய வந்தது.
போலீஸார் பலத்த சப்தத்துடன் சைரன் எழுப்பியபடி வந்ததால் தான் உஷாராகி திருடன் தப்பி விட்டான் எனஅந்தத் தெருவில் இருந்தவர்கள் சோகத்துடன் கூறினர். திருடனைப் பிடிக்கப் போய் கை விரல் துண்டிக்கப்பட்டஇன்ஸ்பெக்டர் லாமேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications