கன மழை-நெய்வேலியில் மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி;தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக நெய்வேலியில் மின் நிலையத்தில்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாகசென்னை, கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால்நெய்வேலி டவுன்-ஷிப் மற்றும் சுரங்கப் பகுதிகள் வெள்ளக் காடாகியுள்ளன.
நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் மழை நீர் புகுந்துவிட்டது. இதனால் நிலக்கரிவெட்டி எடுப்பது தடைபட்டுள்ளது. இதனால் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின்நிலையத்தில் நேற்று இரவு முதல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலக்கரி மழையில் நனைந்துஈரமாகிவிட்டதால் அவற்றை பயன்படுத்த முடியவில்லை.
இந்த அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் தினமும் 600 மெகா வாட் மின்உற்பத்தி செய்யப்படும். ஆனால், நேற்று முதல் 170 மெகா வாட் மின்சாரம் மட்டுமேஉற்பத்தியாகிறது.
மேலும் முதல் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது ஸ்டேஜில் 420 மெகா வாட்மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு மின் உற்பத்தி 380 மெகா வாட்டாககுறைந்துவிட்டது.
இரண்டாம் பிரிவு அனல் மின் நிலையத்தில் 1,470 மெகா வாட் மின்சாரம்உற்பத்தியாகிறது. ஆனால், இங்கு மின் உற்பத்தி 420 மெகா வாட்டாககுறைந்துவிட்டது.
நிலக்கரி தட்டுப்பாட்டால் பர்னஸ் ஆயிலை கொண்டு இப்போது மின் உற்பத்திசெய்யப்படுகிறது. மழை தொடர்ந்தால் இந்த உற்பத்தியும் கூட பாதிக்கப்படும் நிலைஉள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications