மிதக்கும் சென்னை-48 மணி நேரம் மழை நீடிக்கும்
சென்னை:சென்னை நகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக குடிசைப் பகுதிகள் பல நீரில் மிதக்கின்றன.இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள வட கிழக்குப் பருவ மழையால் சென்னை நகரம் வெள்ளக் காடாகமாறியுள்ளது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
குறிப்பாக வேளச்சேரியில் உள்ள திருவள்ளூர் நகர், சாதாரண மழைக்கே தீவு போல மாறி விடும். இதனால்தற்போது பெய்து வரும் மழையைடுத்து இப்பகுதியில் உள்ள 5000க்கும் மேற்பட்ட குடிசைகளை மழை நீர்வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடிசைகளுக்குள்ளும் கூட மழை நீர் புகுந்து விட்டது.
இதனால் அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீர் சூழ்ந்த தங்களதுஇருப்பிடத்திலிருந்து சாலைக்கு வருவதற்கு தெர்மகோல் அட்டைகளை இவர்கள் படகுகள் போல பயன்படுத்திவருகின்றனர்.
கூவம் ஆற்றிலும் மழை நீர் வெள்ளம் போல ஓடி வருகிறது. இதனால் கூவம் கரையொட்டி வசிக்கும்ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மகாகவி பாரதி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய சொந்தமான இடத்தில் குடிசை போட்டு வசிப்பவர்களும்மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அவர்கள் வேறுஇடங்களுக்கு மாற்றப்பட்டள்ளனர்.
இதேபோல திருவொற்றியூர் கார்கில் நகர், ஜோதி நகர், ராஜாஜி நகர் ஆகிய பகுதிகளிலும் குடிசைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அந்த ஏரிகள்உடைப்பெடுத்தால் தங்களது பகுதிகளில் நீர் சூழ்ந்து விடும் என பல புறநகர்ப் பகுதி மக்கள் பீதியில்மூழ்கியுள்ளனர்.
சென்னை புறநகரான மடிப்பாக்கம், ராம் நகரம், உள்ளகரம், புழுதிவாக்கம் ஆகியபகுதிகளில் கடும் பாதிப்பு காணப்படுகிறது. இங்கு கிட்டத்தட்ட 15,000 வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகளுக்குள்ளும்மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை புறநகர்களான தாம்பரம், பரங்கிமலை, தில்லை கங்கா நகர் உள்ளிட்டஇடங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் இங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதனால்கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துவருகின்றனர்.
பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தையொட்டி தண்ணீர் அதிக அளவில் ஓடிக்கொண்டிருப்பதால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பார்வையிட்டார்:
சென்னை நகரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளாட்சித் துறைஅமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மழை வெள்ள நிவாரண நடவடிக்கை குறித்துஅதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில்மாநகராட்சி ஆணையர் விஜயக்குமார், நிர்வாக சீர்திருத்த ஆணையர் சந்தானம்,செயலாளர் ஆதிசேஷய்யா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயா மற்றும்பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் வியாசர்பாடி, கன்னிகாபுரம் ஆகிய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளுக்கு சென்று ஸ்டாலின் பார்வையிட்டார். வியாசர்பாடி, ஜீவா ரயில்பாலத்துக்குக் கீழே சுரங்கப் பாதையில் இடுப்பளவுக்கு அப்போது தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.
அங்கு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஸ்டாலின் இறங்கி சென்றுபார்வையிட்டார். தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து விரைவாகவெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் பெரம்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் அருந்ததி நகருக்கு சென்ற அவர்தண்ணீரால் சூழப்பட்ட பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டு மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்துப் பேசினார்.
தென் சென்னையில் உள்ள அடையாறு, வேளச்சேரி, ஆயிரம் விளக்கு,தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளுக்கும் சென்று ஸ்டாலின் பார்வையிட்டார். மத்தியஅமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறனும் ஸ்டாலினுடன் சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், சில இடங்களில் மழை நீர்கால்வாய்கள் சரியாக தூர் வாரப்படாமல் உள்ளன. இதனால்தான் தண்ணீர்தேங்கியுள்ளது. அங்கு தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீர் விரைவாகவடியும் வகையில் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
இதற்கிடையே சென்னை மாநகர மேயராக நாளை பதவியேற்கவுள்ளமா.சுப்ரமணியம், ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.அங்கு மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் விரைவில் தண்ணீரை வடிய வைக்கநடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வலுவடைந்தது புயல் சின்னம்:
இதற்கிடையே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம்வலுவடைந்துள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதுமன்னார் வளைகுடா முதல் மத்திய மேற்கு வங்கக் கடல் வரை அது பரவியுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் சென்னை உள்ளிட்ட கடலோரப்பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில்வெள்ளப் பெருக்கும் காணப்படுகிறது.
காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்கள் அனைத்திலும் குறுவைப் பயிர்கள் மழை நீரில்மூழ்கி அழுகி விட்டன. தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை தற்போது வடமாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது.
அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சிநிலையம் எச்சரித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications