தமிழகத்தை அச்சுறுத்திய புயல் அபாயம் நீங்கியது

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழகத்தை அச்சுறுத்தி வந்த புயல் சின்னம் தற்போது ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால்தமிழகத்திற்கு புயல் அபாயம் நீங்கியுள்ளது.

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டிருந்தகுறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இந்த பலத்த மழை இருந்து வந்தது.

இந்தச் சூழ்நிலையில் நேற்று வங்கக் கடலில் புதிதாக இன்னொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.இது வலுவடைந்ததால் நேற்று மாலை முதல் கன மழை பெய்து வந்தது. அத்தோடு பலத்த சூறாவளிக் காற்றும்சேர்ந்து கொண்டது.

இது மேலும் வலுவடைந்தால் புயலாக மாறக் கூடிய அபாயம் இருந்தது. இதனால் வட மாவட்டங்களில் பலத்தமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அந்த குறைந்த காற்றழுத்த மண்டலம், ஆந்திராவை நோக்கி நகரத் தொடங்கியது.இதனால் தமிழத்திற்கு ஏற்பட்ட புயல் அபாயம் நீங்கியது.

தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்திற்கும், தெற்கு ஆந்திராவுக்கும் இடையே நிலைகொண்டுள்ளது. இது புயலாக மாறி தெற்கு ஆந்திராவைத் தாக்கக் கூடும் என தெரிகிறது.

புயல் அபாயம் நீங்கி விட்டாலும் கூட வட மாவட்டங்களில் மேக மூட்டமாக காணப்படும், பல பகுதிகளில்பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

புயல் அபாயம் நீங்கியது:

சென்னை நகரில் நேற்று காலையில் சற்றே ஓய்ந்திருந்த மழை பிற்பகல் முதல் மீண்டும் சூடுபிடிக்கத்தொடங்கியது. மாலைக்கு மேல் பலத்த காற்றுடன் கன மழை பெய்யத் தொடங்கியது. விடிய விடிய இந்த மழைபெய்த்து. அத்தோடு பலமான சூறாவளிக் காற்றும் நகரை ஆட்டிப் படைத்தது.

பலத்த காற்றுடன், கன மழையும் சேர்ந்து கொண்டதால், நகரின் பல பகுதிகளில் மின் இணைப்புதுண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்தன. நகரின் அனைத்துப் பகுதிகளிலும்மழை நீர் வெள்ளமென ஓடியது.

முகப்பேர், வேளச்சேரி, வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர்புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சென்னை புறநகரான ஆதம்பாக்கம், கக்கன் நகர் 3வதுதெருவில் நடந்து சென்ற ஜோதி, எஸ்தர் ஆகிய இரு பெண்களும் தரையில் கிடந்த மின்சார வயரை மிதித்ததில்இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

இதேபோல அசோக் நகர் காசி தியேட்டர் அருகே உள்ள பாலத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவாலிபர் ஒருவர் இறந்தார்.

ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் தனபால் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தார். இவர் பெரம்பலூரைச்சேர்ந்தவர். அதேபோல, தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் காரில் சென்ற பாலகிருஷ்ணன், அவரதுதம்பி பாலச்சந்திரன், உதவியாளர் ஆறுமுகம் ஆகிய 3 பேரும் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர்.

நேற்று இரவு மட்டும் சுமார் 8 மணி நேரத்திற்கு சென்னை நகரில் மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கைஅடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு சிறப்பு அதிகாரிகள்:

சென்னை மாநகராட்சியில், வெள்ள நிவாரணப் பணிகளை கவனிப்பதற்காக 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்நியமிக்கபப்ட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அதிகாரி, 10வது மண்டலத்திற்கு மட்டும் 2அதிகாரிகள் என இந்த அதிகாரிகள் 24 மணி நேரம் செயல்படும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்களை மேற்பார்வையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு இன்னொரு அதிகாரி டி.என்.ராமநாதனும்நியமிக்கப்பட்டுள்ளார். அதிகாரிகள் விவரம்:

டி.என்.ராமநாதன் (9444191709)
1. மண்டலம் 1 - ராஜேந்திர ரத்தோர் (9443211078).
2. மண்டலம் 2 - கக்கர்லா உஷா (9840476128).
3. மண்டலம் 3 - மங்கத்ராம் சர்மா (9940051512).
4. மண்டலம் 4 - முத்துக்குமாரசாமி (9884872471).
5. மண்டலம் 5 - கண்ணகி பாக்கியநாதன் (9884437125).
6. மண்டலம் 6 - முருகய்யா (9942710222).
7. மண்டலம் 7 - செல்வி அபூர்வா (9940341444).
8. மண்டலம் 8 - பஷீர் அகமது (9444022812).
9. மண்டலம் 9 - நிர்மலா (9444036701).
10. மண்டலம் 10 - விவேகானந்தன் (9444028840).
11. மண்டலம் 10 - நெடுஞ்செழியன் (9840299792).
இதுதவிர உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த அதிகாரிகள் கூட்டத்தில்மழை, வெள்ள சூழ்நிலையை சமாளிக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

போதிய அளவில் மணல் மூட்டைகளை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். கூவம் ஆற்றில் தூர் வாரும்பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அவற்றை சரி செய்ய மின்சாரஇலாகாவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கன மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் சரிசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பல்வேறு துறையினருக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+