18 திமுகவினர் கட்சியிலிருந்து நீக்கம்
சென்னை:கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கூட்டணிக் கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவியிடங்களில் போட்டியிட்ட18 திமுகவினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 3 எம்.எல்.ஏக்களிடம் திமுக மேலிடம்விளக்கம் கேட்டுள்ளது.
உள்ளாட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் கூட்டணிக் கட்சியினருக்குஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினரே போட்டியிட்டு தலைவர் பதவியைப் பிடித்தனர். இதனால் கூட்டணிக்கட்சிகளிடையே கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை: உள்ளாட்சித்தேர்தலில் திமுக கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 18 பேர் திமுகவிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.இவர்களோடு கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
உள்ளாட்சித் தேர்தலில் கழகக் கட்டுப்பாட்டை மீறியதாக புகார் வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அப்பாவு,உதயம் சண்முகம், கே.பி.ராமசாமி ஆகியோரம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று அன்பழகன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications