மழை நிவாரணப் பணிகள் மந்தம்: ஜெ. புகார்
சென்னை:தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை அரசு சரிவர செய்யவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில்,திமுக அரசு படு சோம்பேறித்தனமாக உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ஏற்படுத்தித் தர எந்தவிதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னெச்சரிக்கையாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மழை வருவதற்கு முன்பே செய்திருக்கவேண்டிய நடவடிக்கைகளையும் இந்த அரசு செய்யவில்லை.
மழை நிலையை சமாளிக்கத் தேவையான உத்தரவுகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அரசுபிறப்பிக்கவில்லை. வேதாரண்யம் பகுதியில் 120 மீனவர்கள் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் இன்னும்திரும்பவில்லை. அவர்களது நிலை குறித்து ஒன்றும் தெரியவில்லை.
புயல் குறித்த எச்சரிக்கையை அரசு முன் கூட்டியே தெரிவித்திருந்தால் நிச்சயம் அவர்கள் கடலுக்குள் போயிருக்கமாட்டார்கள். அரசின் குழப்படியால் அவர்கள் அல்லலில் சிக்கியுள்ளனர்.
இதேபோல கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கிறது.இதனால் கொட்டும் மழையில் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டிய துயரத்தை பெற்றோர்கள் சந்தித்தனர்.
மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் இப்படி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில், தனது பேத்தியின்நடனத்தைப் பார்த்து முதல்வர் கருணாநிதியும், அவரது அமைச்சர்களும் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications