கலாக்கு கொலை மிரட்டல்: இளைஞர் கைது
திருவனந்தபுரம்:குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு இ மெயில் மூலம் கொலைமிரட்டல் விடுத்த இளைஞரை கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து கேரள டிஜிபி ராமன் ஸ்ரீவத்சவா திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேரளாவுக்குவருகை தரவுள்ள குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்து கேரள முதல்வர் மற்றும்காவல்துறை அதிகாரிகளுக்கு இ மெயில் அனுப்பியவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த மெயில்கள் அனைத்தும் கொச்சியில் உள்ள இன்டர்நெட் மையத்திலிருதுதான் அனுப்பப்பட்டன. அந்தமையத்தின் உரிமையாளர் அக்பர் ராஜிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் மிரட்டல் மெயில்களைஅனுப்பியது தெரிய வந்தது.
தனது மையத்திற்கு அடிக்கடி வரும் ஒரு பெண்ணின் மீது அக்பர் ராஜுக்கு காதல் பிறந்துள்ளது. அந்தப்பெண்ணைக் கவருவதற்காக இந்த போலியான மிரட்டல் மெயில்களை அவர் அனுப்பியுள்ளார்.
இந்த மிரட்டல் மெயில்களுக்குப் பின்னால் எந்தவிதமான உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. மேலும்,கலாம் மற்றும் மன்மோகன் சிங்கின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
48 மணி நேரத்தில் மிரட்டல் மெயில்களை அனுப்பிய வழக்கில் தவறு செய்தவரை போலீஸார் கண்டுபிடித்துவிட்டனர். இந்த விசாரணைக்காக அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன தலைமையகத்துடனும் கூடதொடர்பு கொள்ளப்பட்டு உதவியும், தகவல்களும் கோரப்பட்டன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாட்மெயில் மூலம் இந்த மிரட்டல் மெயில்கள் விடுக்கப்பட்டிருந்தன. அக்டோபர்26ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குத்தான் இந்த மெயில் ஐடி உருவாக்கப்பட்டது. இந்த ஐடி மூலம் வேறு எந்தமெயில்களும் அனுப்பப்படவில்லை.
இந்த மெயல் ஐடியை யார் உருவாக்கியது என்று விசாரணை நடத்தியபோது கோட்டயம் மாவட்டம் மேவலூரைச்சேர்ந்த ஒரு பெண்ணின் கவரி கிடைத்தது.
அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, அவர் தனக்கும் இதுபோன்ற மெயில்கள்வந்ததாகவும், அதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். அந்தப் பெண் கொடுத்தபுகாரை வைத்தே அக்பர் ராஜை பிடிக்க முடிந்தது என்றார் ஸ்ரீவத்சவா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications