பேச்சுவார்த்தை தோல்வி: யாழில் கடும் சண்டை
ஜெனீவா:ஜெனீவாவில் இலங்கை அரசுத் தரப்புக்கும், விடுதலைப் புலிகள் குழுவுக்கும் இடையே நடந்த 2 நாள்பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில்கடும் சண்டை மூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நார்வே அமைதிக் குழுவின் முயற்சியால் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 2 நாள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் இலங்கை அரசின் தரப்பில் அமைச்சர் நிமல் ஸ்ரீபாலா டிசில்வா தலைமையிலான 8 பேர் குழுவும்,தமிழ்ச்செல்வன் தலைமையிலான 10 பேர் கொண்ட புலிகள் குழுவும் கலந்து கொண்டன.
நார்வே அமைதித் தூதர் ஜோன்சன் பேயர் தலைமையிலான நார்வே குழுவும் அமைதிப் பேச்சுவார்த்தையில்பங்கெடுத்தது. யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதியையும் இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலையை திறக்கவேண்டும் என பேச்சுவார்த்தையின்போது புலிகள் தரப்பு வற்புறுத்தியது.
ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால் பேச்சுவார்த்தையில் எந்தஉடன்பாடும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் தமிழ்ச் செல்வன், நிமல் ஸ்ரீபாலா, நார்வே அமைச்சர் எரீக் சோல்ஹீம் ஆகியோர்கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சோல்ஹீம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சாலையைத் திறக்க வேண்டும் என புலிகள் தரப்பு வலியுறுத்தியது. ஆனால் இதைஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
இதனால் உடன்பாடு எட்டப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றார்.
புலிகள் தரப்பில் பேசிய ஜார்ஜ், எங்களது கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால்உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால்எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை பேச்சுவார்த்தையில் நாங்கள் கலந்து கொள்ள முடியாது.
நார்வே தூதுக் குழுவும், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசை வலியுறுத்தி எங்களதுகோரிக்கையை ஏற்கச் செய்ய உதவ வேண்டும் என்றார். யாழ்ப்பாண சாலையை திறக்க இலங்கை அரசு மறுத்துவிட்டதால் ஜெனீவா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே யாழ்ப்பாணம் பகுதியில் கடும் சண்டைமூண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பகுதியில் கடும் பீரங்கிச் சண்டை நடந்து வருவதாக தகவல்கள்கூறுகின்றன. இந்த சண்டையால் தமிழர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வசந்தா நல்லதம்பி என்பவர் கூறுகையில், மீண்டும் பெரிய அளவில் போர் வெடிக்கும்சூழல் ஏற்பட்டுள்ளது. 8வது முறையாக பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கை ராணுவம் இனிதாக்குதலை ஆரம்பிக்கும். பதிலுக்கு புலிகளும் தாக்குவார்கள். போர் தவிர்க்க முடியாதது என்றே தோன்றுகிறதுஎன்று கவலை தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications