தெ.ஆ. பயணம்: இந்திய அணி அறிவிப்பு
மொஹாலி(சண்டிகர்):தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியலை இந்தியகிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
சாம்பியின்ஸ் டிராபி போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்ட இந்திய கிரிக்கெட் அணிதென்ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. அங்கு 5 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிவிளையாடவுள்ளது. முதல் போட்டி நவம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ளவுள்ள 16 பேர் கொண்ட அணியை தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த பல தொடர்களில் சேர்க்கப்படாமல் இருந்து வந்த சுழற்பந்து வீச்சாளர் அணில் கும்ப்ளே,வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதேபோல வாசிம்ஜாபரும் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
காயமடைந்துள்ள யுவராஜ் சிங், அஜீத் அகர்கர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு உடல்தகுதி சோதனை நடத்தப்படும். அதில் அவர்கள் தேர்வாகவிட்டால், அவர்களுக்குப் பதில் திணேஷ் கார்த்திக்மற்றும் வி.ஆர்.வி. சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவர்.
செளரவ் கங்குலியின் பெயரை தேர்வுக் குழுவினர் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளவில்லை என்று தேர்வாளர்குழுத் தலைவரான வெங்சர்க்கார் தெரிவித்தார்.
இந்திய அணியின் விவரம்: டிராவிட் (கேப்டன்), ஷேவாக் (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், முகம்மதுகைப், வாசிம் ஜாபர், சுரேஷ் ரெய்னா, அணில் கும்ப்ளே, திணேஷ் மோங்கியா, முனாப் பட்டேல், ஜாகிர் கான்,ஸ்ரீசாந்த், கும்ப்ளே, ஹர்பஜன் சிங், பதான், தோணி, அஜீத் அகர்கர் (வி.ஆர்.வி. சிங்), யுவராஜ் சிங் (திணேஷ்கார்த்திக்).
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications