பச்சைத் துரோகம் நாங்கள் செய்யவில்லை: திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதுகூட்டணி தர்மத்திற்கு விரோதமானது. திமுக அப்படி ஒருபோதும் செய்யாது என்றுதிமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

உள்ளாட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக பச்சைத் துரோகம் செய்து விட்டது.திட்டமிட்டு பாமக வேட்பாளர்களை தோற்கடித்து விட்டனர். பணம் வாங்கிக் கொண்டுபாமகவினரை ஏமாற்றி விட்டனர், மு.க.அழகிரி பாமகவினரை அலைய வைத்துகேவலப்படுத்தி விட்டார்.

இனிமேல் திமுக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர மாட்டோம், பொறுப்புள்ளஎதிர்க்கட்சியாக செயல்படுவோம் என டாக்டர் ராமதாஸ் நேற்று பரபரப்பு பேட்டிஅளித்தார்.

இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில்ராமதாஸின் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், அண்ணாஅறிவாலயத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி நேற்று மாலை பேட்டிஅளித்தார்.

அப்போது ஆற்காடு வீராசாமி கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலின்போது இடப் பங்கீடு குறித்து பாமகவுடன் 7 நாட்களுக்கு மேல்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை முடிந்து திருப்திகரமாக செல்வதாகஅக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 5 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் 4ல் அவர்கள்வென்றுள்ளனர். இது எப்படி 50 சதவீத தோல்வி ஆகும்? மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவி என்பது மேயர் பதவிக்கு அடுத்து பெரிய பதவி.

திமுக யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அதுவும் பச்சைத் துரோகம் செய்யவேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்துக் கூடப் பார்க்கவும் இல்லை. செய்யவும்இல்லை. ஆங்காங்கே, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் எல்லாக்கட்சிகளிலும் சிறு தவறுகள் நடந்துள்ளன. அந்த தவறுகளுக்கெல்லாம் எல்லாக்கட்சிகளும் துரோகம் செய்து விட்டதாக கூற திமுக தயாராக இல்லை.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் சில குறைகளைத்தான் சொல்லியுள்ளனர்.மாறாக பச்சைத் துரோகம் என்று கூறவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்தா.பாண்டியன் கூட, கீழ் மட்டத்தில் உள்ளவர்களால் சில இடங்களில் வெற்றி பெறமுடியவில்லை என்று தான் கூறியுள்ளார்.

இந்தத் தேர்தலில் சதவீத அடிப்படையில் இடப் பங்கீடு மேற்கொள்ளப்படவில்லை.மொத்தத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு என்று ஒதுக்கீடு செய்து கொண்டோம்.

மேயர் என்றால் காங்கிரஸுக்கு 2 என்று கூறி அதை ஒதுக்கினோம். அதேபோலமாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் காங்கிரஸுக்கு 7, பாமகவுக்கு 5,மார்சிஸ்ட்டுக்கு 3, இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு 2 என்று ஒதுக்கீடு செய்தோம்.

சென்னை மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் நாங்கள் சொல்பவரைத்தான்வேட்பாளராக நிறுத்த வேண்டும் என் நாங்கள் சொல்லவில்லை. பாமகவுக்கு துணைமேயர் பதவி கேட்டார்கள். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்திலிருந்தே துணைமேயர் பதவியை நாங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்குத்தான் வழங்கிவருகிறோம்.

காரணம், சென்னையில் 28 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களைமகிழ்விப்பதற்காக தாழ்ப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை துணை மேயராக்கவேண்டும் என்பது திமுகவின் எண்ணம். அந்த அடிப்படையில் தான் 1996ல் ஒருதாழ்த்ப்பட்ட பெண்ணை துணை மேயராக்கினோம். இப்போதும் கூட துறைமுகத்தைச்சேர்ந்த சத்தியபாமா என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை, துணை மேயராகஅறிவித்தோம்.

இதையடுத்து எங்களுக்குத் துணை மேயர் பதவி வேண்டும் என்று பாமக கோரியது.இதைத் தொடர்ந்து ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் பாமகவுக்கு துணை மேயர்பதவியைக் கொடுப்பது என்று கருணாநிதி முடிவு செய்தார்.

அப்படிச் செய்யும்போது, தாழ்த்தப்பட்ட பெண் வேட்பாளராக இருந்தால் நன்றாகஇருக்கும். உங்களது கட்சியிலேயே எம்.காம் படித்த ஒரு பெண் கவுன்சிலர்இருக்கிறார் என்று பாமகவிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை.இதுதான் நடந்தது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தேவைப்படும்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களின்கூட்டத்தை கலைஞர் கூட்டுவார். ஒரு சில இடங்களில் தவறு நடந்துள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியபோது, கலைஞர், நான்,ஸ்டாலின் ஆகியோர் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் சில இடங்களில் தோல்விஅடைந்ததாக செய்திகள் வந்தபோது கலைஞர் ஆத்திரப்பட்டார். உடனடியாகதலைமைக் கழகத்தைத் தொடர்பு கொண்டு, யாரெல்லாம் தவறு செய்தார்களோஅவர்களையெல்லாம் கட்சியை விட்டு நீக்குவதாக அறிக்கை விடுமாறுஉத்தரவிட்டார்.

ராமதாஸ் அறிக்கை விடுவதற்கு முன்பே திமுகவைச் சேர்ந்த 18 பேர் மீது நடவடிக்கைஎடுக்கப்பட்டு விட்டது. தவறு திமுகவில் மட்டும் நடக்கவில்லை, எல்லாக்கட்சிகளிலும்தான் நடந்துள்ளது. தவறு செய்தவர்களை திமுகவால் தண்டிக்கமட்டும்தான் முடியும், வேறு என்ன செய்ய முடியும்?

முதல்வர் கூறியுள்ளதைப் போல இதுபோன்ற மிகப் பெரிய தேர்தலில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக சில தவறுகள் எல்லாக் கட்சியிலும் நேரிடுவது இயல்புதான்.அதற்காக ஒட்டுமொத்த தேன் கூட்டையே கலைப்பது போன்ற செயல்களில்ஈடுபடுவது சரியாகி விடுமா என்றார் ஆற்காடு வீராசாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+