சட்ட மாணவி கொலை: வக்கீலுக்கு தூக்குத் தண்டனை
டெல்லி:டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு சட்டக் கல்லூரியில் படித்து வந்த பிரியதர்ஷினிமட்டூ என்ற மாணவியை கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்த வழக்கறிஞர்சந்தோஷ் குமார் சிங்குக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துபரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய சம்பவம் மட்டூ கொலைசம்பவம். டெல்லி சட்டக் கல்லூரியில் படித்து வந்த மட்டூவை, வழக்கறிஞர் சந்தோஷ்குமார் சிங் (இவரது தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி) டெல்லி வசந்த் கஞ்ச்பகுதியில் உள்ள மட்டூவின் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வைத்து கொடூரமாககற்பழித்தார். பின்னர் அவரைக் கொலை செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சந்தோஷ் குமார் சிங் கைது செய்யப்பட்டு டெல்லி மாவட்டசெஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்தசெஷன்ஸ் நீதிபதி தரேஜோ, சந்தோஷ் குமார் சிங் குற்றவாளி என்பது தெளிவாகதெரிகிறது. ஆனால் அதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறிசிங்கை விடுதலை செய்து விட்டார்.
இதற்கு வட இந்தியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மட்டூ கொலை வழக்கிலிருந்துசந்தோஷ் குமார் சிங்கை தப்ப வைக்க அதிகார துஷ்பிரயோகம் நடந்துள்ளதாகபெண்ணுரிமை இயக்கங்கள், மகளிர் அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி டெல்லிஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றுகண்டனம் தெரிவித்தது.
மேலும், உயர்நீதிமன்றமே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கத் தொடங்கியது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.எஸ்.சோதி, பி.கே.பாசின் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் நேற்று தனது தீர்ப்பை அளித்தது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம்:
இதுபோன்ற கொடூரமான குற்றத்திற்கு தூக்குத் தண்டனையை விட மிகக் கடுமையானதண்டனை வேறு எதுவும் இல்லை என்பது எங்களது அபிப்பிராயம். எனவே சந்தோஷ்குமார் சிங்கை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்பதே எங்களது தீர்ப்பு.
நடந்த சம்பவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதைஉணர முடிகிறது. எனவே இதற்கு நேரடியான சாட்சி தேவையில்லை என்பதுபெஞ்ச்சின் கருத்து என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீர்ப்பு குறித்து பிரியதர்ஷினியின் தந்தை சமன் லால் மட்டூ கருத்துதெரிவிக்கையில், எனது மகளை நான் இழந்து விட்டேன். இந்த நிலையில்எப்படிப்பட்ட தீர்ப்பு வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய மன நிலையில்தான்நான் உள்ளேன்.
எந்தத் தண்டனையாக இருந்தாலும், இதுபோன்ற அரக்கத்தனமான குற்றங்களில்ஈடுபடுவோருக்கு இது ஒரு சிறந்த பாடமாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள வேறுஎந்த மகளுக்கும் இதுபோன்ற ஒரு கொடுமை நடக்காமல் தடுக்க இந்த தண்டனைஉதவ வேண்டும் என்றார்.
இதற்கிடையே, இந்தத் தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக சந்தோஷ் குமார் சிங்கின் தந்தை ஜே.பி.சிங் கூறியுள்ளார்.தீர்ப்பைத் தொடர்ந்து சந்தோஷ் குமார் சிங் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications