ஐ.டி. மையங்களாகும் தமிழகத்தின் 6 நகரங்கள்
பெங்களூர்:தமிழகத்தில் சென்னை தவிர மேலும் 6 நகரங்களை தகவல் தொழில்நுட்ப நகரங்களாக்க தமிழக அரசுதிட்டமிட்டுள்ளதாக பெங்களூரில் தொடங்கிய ஐடி.இன் தகவல் தொழில்நுட்ப கண்காட்சியில் தமிழக அரசின்தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் சந்திரமெளலி தெரிவித்தார்.
பெங்களூரில் ஐடி.இன் என்ற பெயரில் தகவல் தொழில்நுட்பக் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில் தமிழகஅரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பிலும் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சியில் கலந்து கொண்ட டாக்டர் சந்திரமெளலி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் தகவல்தொழில்நுட்பத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் இதர நகரங்களிலும் இத்துறையை வளப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை மற்றும் ஓசூர் ஆகிய நகரங்களை தகவல் தொழில்நுட்பமையங்களாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்ப்ப பூங்காக்கள்அமைக்கப்படவுள்ளன.
தகவல் தொழில்நுட்ப் பூங்காக்கள் அமைப்பதற்கு இடங்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டன. இன்னும் 3மாதங்களில் இவை செயல்பாட்டுக்கு வரும்.
இரு வடிவில் இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. ஒன்று கோபுர வடிவிலானபூங்கா, மற்றொன்று கேம்பஸ் வடிவிலான தொழில்நுட்பப் பூங்கா ஆகும்.
கோவையில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை, தமிழக அரசின் எல்காட் நிறுவனம், டிஐடிஇஎல் நிறுவனம்இணைந்து நிர்மாணிக்கவுள்ளன. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 8ம் தேதி முதல்வர் கருணாநிதிமுன்னிலையில் கையெழுத்தானது.
6 நகரங்களிலும் அமைக்கப்படும் தொழில்நுட்ப்ப பூங்காக்கள் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்படும்என்றார் சந்திரமெளலி. பேட்டியின்போது எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் உமாசங்கரும் உடனிருந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications