ராமதாஸ் புகாரில் உண்மை இல்லை: கருணாநிதி
சென்னை:சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது உண்மை அல்லஎன்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை துணை மேயருக்கான வேட்பாளர் யார் என்பதை திமுக தலைவரே நிர்ணயிப்பதா என்று பாமகநிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கேட்டுள்ளது நியாயமான கேள்விதான்.
அப்படி தோழமைக் கட்சி ஒன்றின் மீது நான் அதிகாரம் செலுத்திடவோ, ஒரு பதவி பெற்றுத் தரவோ உரிமைஇருப்பதாக எண்ணி, அந்த முயற்சியில், நான் ஈடுபட்டிருந்தால், அது தவறுதான். ஆனால் என்ன நடந்ததுஎன்பதை நான் விளக்கினால், மற்றொரு கட்சியின் வேட்பாளர் பிரச்சினையில் நான் தலையிட்டதாகக் கூறப்படும்பழிச் சொல் நீங்கும் என்று நம்புகிறேன்.
சென்னை துணை மேயர் பதவிக்கு பாமக வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என டாக்டர் அய்யா எனக்கு கடிதம்அனுப்பினார். அந்தப் பதவிக்கு திமுக சார்பில் சத்யபாமா என்ற ஒரு தலித் பெண்மணியை, சென்னையிலேஉள்ள மக்கள் தொகையில், கணிசமான பகுதியினர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்றஅடிப்படையில்;
ஏற்கனவே பத்திரிகைகளில் அறிவித்து விட்ட காரணத்தால், அவரைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லும்போதுஅந்த இடத்தில் வேறு ஒரு தலித் பெண்மணியை பாமக சார்பில் நிறுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும்,பிரச்சினையும் வராது என்றும் யோசனை சொன்னேன்.
அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து, அப்படியானால் துணை மேயர் பதவியே வேண்டாம் என்ற பதில்தான் வந்தது.நடந்தது இப்படியிருக்க நான் ஒரு வேட்பாளரை பாமக மீது திணித்ததாக கூறுவதில் சிறிதளவும் உண்மை இல்லைஎன்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications