யாழ்.சாலை: புலிகளுக்கு இலங்கை நிபந்தனை
கொழும்பு:இலங்கை ராணுவம் மீதான தாக்குதலை விடுதலைப் புலிகள் நிறுத்தினால், யாழ்ப்பாணத்திற்கு செல்லும் முக்கியநெடுஞ்சாலையை திறப்பது குறித்து இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமீபத்தில் ஜெனீவா நகரில் பேச்சுவார்த்தை நடந்தது.அப்போது யாழ்ப்பாணத்தையும், நாட்டின் இதர பகுதிகளையும் இணைக்கும் ஏ 9 நெடுஞ்சாலையை இலங்கைஅரசு திறக்க வேண்டும் என புலிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இக்கோரிக்கையை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டது. இதனால் பேச்சுவார்த்தை தோல்விஅடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே இலங்கையின் வட பகுதியில்புலிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் கடுமையான பீரங்கிச் சண்டையில் இறங்கினர். இதனால் தமிழர்களிடையே போர் பீதிஅதிகரித்தது. வவுனியாவில் ராணுவ வாகனம் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் கொல்லப்பட்டார், 3ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்தினால், யாழ்ப்பாணம் சாலையை திறப்பது குறித்துயோசிப்போம் என்று இலங்கை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சுகாதார அமைச்சரும், ஜெனீவா பேச்சுவார்த்தையில் இலங்கை குழுவுக்குத் தலைமைவகித்துவருமான நிமல் ஸ்ரீபாலா டிசில்வா கூறுகையில், புலிகள் முதலில் தாக்குதலைக் கைவிட வேண்டும்.அப்படி செய்வதாக இருந்தால் யாழ்ப்பாணம் நெடுஞ்சாலையைத் திறப்போம்.
முதலில் அங்கு அமைதி திரும்ப வேண்டும். இதற்கு புலிகள் தரப்பு உத்தரவாதம் கொடுக்குமானால் நாங்கள்சாலையைத் திறப்போம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் டிசில்வா.
இலங்கை அரசின் இந்த புதிய வாய்ப்பு குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த கருத்தும்வெளியிடப்படவில்லை. நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஹீரோக்கள் தினத்தின் போது புலிகளின் அடுத்த கட்டநடவடிக்கை குறித்து பிரபாகரன் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், பொய்யானதகவல்களைக் கொடுத்து இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகளை இலங்கை அரசுதடுத்து விட்டது.
மீண்டும் தமிழர்கள் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்த அது தயாராகி வருகிறது. ஆனால் எங்களதுமக்களைக் காக்க நாங்கள் தீவிரமாக போர் தொடுப்போம். அதற்கான தலைமையின் உத்தரவுக்காக எமது வீரர்கள்காத்துள்ளனர் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications