புது வழக்கில் சேகர்பாபு எம்எல்ஏ கைது
சென்னை:பெட்ரோல் வெடிகுண்டுகளை விநியோகித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளஅதிமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு, உள்ளாட்சித் தேர்தலின்போது கார் ஒன்றை அடித்துநொறுக்கியதாக இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 13ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்தபோது பெரும் வன்முறைமூண்டது. இந்த சமயத்தில் அதிமுகவினர் பலரை போலீஸார் கைது செய்தனர்.
அப்போது, அதிமுக எம்.எல்.ஏ.வும், வட சென்னை மாவட்ட அதிமுகசெயலாளருமான சேகர்பாபுவும் கைது செய்யப்பட்டார். பழவந்தாங்கல் நகராட்சித்தேர்தலில் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக ரவுடிகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைஏற்பாடு செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடர்ந்துதலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சேகர்பாபுவை இன்னொரு வழக்கிலும் போலீஸார் கைதுசெய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலன்று, தண்டையார்பேட்டை வரதப்பா ஹோம்முன்பு நடந்த மறியலின்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது டாடா சுமோ காரை10 பேர் கொண்ட கும்பல் அடித்து உடைத்ததாக சரவணன் என்பவர் போலீஸில் புகார்கொடுத்தார்.
இந்தப் புகார் தொடர்பாக தற்போது சேகர்பாபுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.இதுதொடர்பாக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கைது வாரண்ட்டைப் பெற்ற போலீஸார்மத்திய சிறைக்குச் சென்று அதை சேகர்பாபுவிடம் காட்டி கைது செய்து அவரிடம்கையெழுத்து பெற்றனர்.
இதைத் தொடர்ந்து இந்த புதிய வழக்கில் அவரை ஜார்ஜ் டவுன் 14வது நீதிமன்றத்தில்போலீஸார் சேகர்பாபுவை ஆஜர்படுத்தினர். அப்போது ஜாமீன் கோரி சேகர்பாபுசார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் ஆட்சேபனைதெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து புதிய வழக்கில் சேகர்பாபுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இருப்பினும், முதல்வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதிலும் கிடைத்தால்தான்அவரால் விடுதலையாகி வெளியே வர முடியும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications