கற்பனையில் உளறும் ஜெ.: பொன்முடி தாக்கு
சென்னை:பண்ருட்டி நகராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக தோற்றதற்கு திமுக மீதும், என் மீதும் ஜெயலலிதா பழிசொல்வது கண்டனத்துக்குரியது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: உள்ளாட்சித் தேரத்லில் படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாஏதேதோ காரணங்களைத் தேடி கூறிக் கொண்டிருக்கிறார்.
அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், அவரது கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு விழுப்புரம் மாவட்டச்செயலாளரான என் பெயரை இழுத்துள்ளார். பண்ருட்டி எந்த மாவட்டத்தில் உள்ளது என்பது கூட அவருக்குத்தெரியவில்லை.
தான் திருடி பிறரை நம்பாள் என்பது பழமொழி. கடந்த தேர்தலில் அவர்கள் செய்த தில்லுமுல்லுகளைஇப்போதும் செய்திருப்பார்களோ என்று கற்பனையில் ஜெயலலிதா உளறி வருகிறார்.
திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள்தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கும், அதன் கூட்டணிக்கட்சிகளுக்கும் வெற்றி கிடைக்கக் காரணம் என நடுநிலையாளர்கள் பாராட்டினாலும் அதை ஏற்க முடியாதஜெயலலிதா தொடர்ந்து வெளியிடும் அறிக்கைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
முன்னுக்குப் பின் முரணாக பேசி பேசி குழியில் விழுந்து விட்ட அதிமுகவின் மீது மேலும் மண்ணைக் கொட்டிநிரப்பி வருகிறார் ஜெயலலிதா. அவருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார் பொன்முடி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications