வருகிறார்கள் சுற்றுலா காவலர்கள்!
சென்னை:தமிழகம் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உதவவும், பாதுகாப்பு அளிக்கவும் சுற்றுலாக் காவலர்கள் திட்டம் அறிணிகப்படுத்தப்படவுள்ளதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அங்கீகாரம் இல்லாத கைடுகள் மூலம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இது தவிர மேலும் பல பிரச்சினைகளும் உள்ளன.
இவற்றைத் தடுக்கவும், தமிழகத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் சுற்றிப் பார்க்க வசதியாக சுற்றுலா காவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
ணிதல் கட்டமாக சோதனை அடிப்படையில், மகாபலிபுரம், ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாத் தலங்களில் இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்த ஐந்து இடங்களிலும் ஒரு போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். அங்கு ஒரு ஏட்டு, ஐந்து காவலர்கள் இருப்பார்கள். இதுதவிர சுற்றுலா பயணிகளுக்கு உரிய தகவல்களை அளித்து வழி காட்டுவதற்கு 400 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியை ணிடித்த பின்னர் இந்த ஐந்து இடங்கள் தவிர சென்னை, தஞ்சை, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய ஊர்களிலும் இவர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், இந்தியில் கையேடு வெளியிடப்படும். ணிதல் கட்டமாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளைப் பற்றிய தகவல் அடங்கிய கையேடு இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி, ஏற்காடு ஆகிய இடங்களில் தனியார் உதவியுடன் ரோப் கார் வசதி செய்யப்படும்.
இதுதவிர மதுரைக்கு ஹெலிகாப்டர் சேவையும் ஏர்படுத்தப்படும். இதுதொடர்பாக தனியார் நிறுவனமான பவன்ஹன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடந்து வருகிறது என்று கூறியுள்ளார் சுரேஷ் ராஜன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications