மனைவியிடம் செக்ஸ் சித்ரவதை: கணவர் மீது வழக்கு
சென்னை:நீலப்படம் காட்டி அதேபோல தன்னுடனும் உறவு கொள்ளுமாறு கூறி மனைவியைசித்திரவதை செய்த கணவனை குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பப் பெண்கள் கணவரிடம் அனுபவிக்கும் சித்திரவதைகளிலிருந்து மீள்வதற்குவசதியாக சமீபத்தில் குடும்பப் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதலாவதாகநெல்லையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இப்போது சென்னையில் இதே சட்டத்தின் கீழ் ஒருவர் கைதாகியுள்ளார். அவரது பெயர்சிவக்குமார். சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியையான சாருமதிக்கும் இடையே கடந்தநான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் சாருமதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால்சிவக்குமாரின் தாயாரும், சகோதரியம் சேர்ந்து சாருமதியைகொடுமைப்படுத்தியுள்ளனர். பெண் குழந்தை பெற்றதற்காக திட்டித் தீர்த்தனர்.
கணவர் குடும்பத்தாரின் கொடுமையால் தனது குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டார் சாருமதி. கூடுதலாக வரதட்சணை பணத்தை வாங்கிக் கொண்டு வந்துகொடுமைகளை சகித்துக் கொண்டு கணவர் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில், சிவக்குமார் செக்ஸ் வக்கிரத்தை காட்டி சாருமதியைகொடுமைப்படுத்தி வந்துள்ளார். அடிக்கடி நீலப் படங்களை போட்டுக் காட்டி அதில்வருவது போலவே தன்னுடன் உறவு கொள்ளுமாறு சாருமதியை துன்புறுத்தியுள்ளார்.
அதற்கு சாருமதி சம்மதிக்கா விட்டால் மிருகத்தனமாக அடித்து உதைத்துக்கொடுமைப்படுத்துவாராம். மேலும், வேறு பெண்களிடம் போய் தான் விரும்பியபடிஉல்லாசம் அனுபவித்துள்ளார்.
இந்த நிலையில்தான், சாருமதியிடம் டியூஷன் படிக்க வந்த ஷாலினி என்றமாணவியை தனது வலையில் வீழ்த்தினார் சிவக்குமார். அவருடன் சேர்ந்து பலஇடங்களுக்கும் போய் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த உண்மை சமீபத்தில்தான் சாருமதிக்குத் தெரிந்துள்ளது. சிவக்குமார்குடிபோதையில் வீட்டுக்கு வந்தபோது அவரது செல்போன் தவறி கீழே விழுந்துள்ளது.அதை தற்செயலாக எடுத்துப் பார்த்த சாருமதி, ஷாலினியும், சிவக்குமாரும் முத்தம்கொடுத்துக் கொண்டிருப்பதைப் போன்ற படம் இருந்தது.
மேலும் ஷாலினியும், சிவக்குமாரும் பல்வேறு கோணங்களில் படுத்திருப்பது,ஷாலினியின் நிர்வாணப் படங்களும் அதில் இருந்தன.இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சாருமதி, இதற்கு மேலும் இவருடன் வாழமுடியாது என்று முடிவு கட்டி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
பெற்றோர் வீட்டுக்கு அவர் சென்று 3 மாதங்களாகியும் கூட தொடர்ந்து சாருமதியைவீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்துள்ளார் சிவக்குமார். பணம் கொடு, வீட்டுக்கு வாஎன்று வற்புறுத்தியுள்ளார்.
பொறுத்துப் பார்த்த சாருமதி, தனது கணவர் செய்யும் கொடுமைகளை விளக்கி மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரணிடம் புகார் கொடுத்தார். புகாரை ஏற்றஆணையர், விசாரணைக்கு உத்தரவிட்டார்.
உதவி ஆணையர் ரசல் சாம்ராஜ் நடத்திய விசாரணையில் செல்போன் ஆதாரம்உள்ளிட்டவற்றை சாருமதி கொடுத்தார். இதையடுத்து சிவக்குமார் மீது வரதட்சணைக்கொடுமை, தவறான உறவுக்கு கட்டாயப்படுத்துதல், குடும்பப் பெண்கள்வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மாணவி ஷாலினி, சிவக்குமாரின் அம்மா சுந்தரி, அக்கா கலையரசிஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். வழக்கைத் தொடர்ந்து சிவக்குமார்தலைமறைவாகி விட்டார். முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications