கொலை முயற்சி: அதிமுக வக்கீல் ஜோதி புகார்
சென்னை:அதிமுக வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்பியுமான ஜோதியை கொலை செய்ய முயற்சி நடந்ததாக கூறி சென்னைஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம், அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இன்று புகார்தெரிவித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சம்பந்தப்பட்ட முக்கிய வழக்குகளிலும், அதிமுக தொடர்பானவழக்குகளிலும் ஆஜராகி வருபவர் ஜோதி. ராஜ்யசபா எம்பியாகவும் உள்ளார்.
இன்று ஜோதி தலைமையில் அதிமுக வழக்கறிஞர்கள் குழு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிஏ.பி.ஷாவை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர்.அதுகுறித்து ஜோதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நேற்று எனது பணிகளை முடித்து விட்டுநள்ளிரவுக்கு மேல் அண்ணா நகரில் உள்ள எனது வீட்டுக்குத் திரும்பினேன். அப்போது சிலர் எனது வீட்டுக்குவந்தனர்.
அவர்களிடம் யார் என்று நான் விசாரித்தபோது தலைமைச் செயலகத்திலிருந்து வருவதாக கூறிய அவர்கள்சம்பந்தம் இல்லாமல் பேசி, சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்டனர்.சுதாரித்துக் கொண்ட நான், எனது வீட்டின் இரும்புக் கதவை பூட்டிக் கொண்டு உள்ளே இருந்தபடி அவர்கள் யார்என்பதை அடையாளம் காண முயன்றேன்.
நான் சுதாரித்துக் கொண்டதை அறிந்த அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் நிச்சயம்குண்டர்களாகத்தான் இருக்க முடியும். திமுகவினர் தூண்டுதலால் என்னை தாக்க வந்த கும்பல் அது. நான் மட்டும்வெளியே வந்திருந்தால் நிச்சயம் என்னைத் தாக்கி கொலை செய்திருப்பார்கள்.
இதுகுறித்து தலைமை நீதிபதியிடம், மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளோம் என்றார்ஜோதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications