பெங்களூரு, மங்களூரு, மைசூரு, பெலகாமி!
பெங்களூர்:கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூர் மற்றும் மைசூர், மங்களூர், பெல்காம், ஷிமோகா ஆகிய நகரங்களின்பெயர்கள் இன்று முதல் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, பெலகாமி, ஷிவமுகா என பெயர் மாற்றம்செய்யப்படுகின்றன.
இந்தியாவின் பல்வேறு நகரங்களின் பெயர்கள் தங்களது பழைய பெயருக்கு மாறிக் கொண்டுள்ளன. முதலில்பம்பாய், மும்பை ஆனது. பின்னர் கல்கத்தா கொல்கத்தா ஆனது. பிறகு மெட்ராஸ் சென்னை ஆனது. சமீபத்தில்பாண்டிச்சேரி புதுச்சேரியாக மாறியது.
இந்த நிலையில் கர்நாடகத்தின் ஐந்து முக்கிய நகரங்களின் பெயர்களை பழைய பெயர்களுக்கே மாற்ற அம்மாநிலஅரசு முடிவு செய்தது. தலைநகர் பெங்களூர், மைசூர், மங்களூர், ஷிமோகா, பெல்காம் ஆகிய நகரங்களின்பெயர்களை பெங்களூரு, மைசூரு, ஷிவமுகா, பெலகாமி, மங்களூரு என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உருவாகி 50 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று நடைபெறும் ராஜ்யோத்சவாவிழாவின்போது இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் குமாரசாமி இன்று வெளியிடுகிறார்.
பெயர் மாற்றம் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு முன்பாகவே பெயர்களை மாற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இன்று முதல் மேற்கண்ட ஐந்து நகரங்களின் பெயர்களும் அவற்றின் பழைய பெயரிலேயே அழைக்கப்படும் எனகர்நாடக அரசு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications