ரயில் விபத்து: பலியானவர் குடும்பங்களுக்கு நிதியுதவி
சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கம் என்ற இடத்தில் ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதியதில் பலியான 17 பேர்குடும்பங்களுக்கும் தலா ரூ. 50,000 நிதியுதவியை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
புதுப்பாக்கம் என்ற இடத்தில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்காக ஷேர் ஆட்டோவில் சென்றவர்கள், ஆளில்லாத ரயில்வேகிராசிங்கை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினர்.
திருமால்பூரிலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தில் சிக்கி நின்று விட்ட ஆட்டோமீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 15 பெண்கள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயேபலியாயினர்.
17 பேர் இறந்த சம்பவத்திற்கு முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர்களின்குடும்பங்களுக்கு நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவம் கவனத்துக்கு வந்ததைத்தொடர்ந்து முதல்வர் கருணாநிதி மிகுந்த வருத்தமடைந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டதுடன்,உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 50,000 ரூபாய் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்துநிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விபத்தில் 17 உயிர்களைப் பலி கொடுத்த ஓரிக்கை கிராமம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.கிராமத்தில் எங்கு பார்த்தாலும் அழுகுரல்களாக காணப்படுகிறது.
விபத்தில் இக்கிராமத்தைச் சேர்ந்த வசந்தி (35), அருண் (21), அருணா (19), அனு (15), பவானி (21),மங்கையர்க்கரசி (45), வன மயில் (35), தனபாக்கியம் (60), ராமன் (60), குணசுந்தரி (45), வள்ளியம்மாள் (50),ஆட்டோ டிரைவர் மஸ்தான், ராஜேஷ் (20), பவுனு (25), குள்ளம்மாள் (50), முனியம்மாள் (30), கோவிந்தமாள்(60) ஆகியோர் பலியாகினர்.
விபத்தில் இறந்த பவானிக்கு கல்யாணமாகி 3 நாட்கள்தான் ஆகின்றனவாம். அவரது உடலைப் பார்த்து கணவர்ஆல்பர்ட் கதறி அழுதது ஓரிக்கை கிராமத்தையே உலுக்கியது.
ரயில்வே அமைச்சர் உதவி:
விபத்தில் பலியானவர்களுக்கு ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்தோடு,ஈமச்சடங்கு, போக்குவரத்து ஆகியவற்றுக்காக தலா ரூ. 10,000 வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications