யாழ். தமிழர்களுக்கு உதவத் தயார்: இந்தியா
டெல்லி:உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் தவிக்கும் யாழ்ப்பாணத்திற்கு உதவிகள்செய்யத் தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.இலங்கையின் வட பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு 50,000 ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், யாழ்ப்பாணத்தையும்,நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடியுள்ளது.இதனால் சாலை மார்க்கமாக நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாத நிலைநிலவுகிறது. கப்பல் மற்றும் விமானம் மூலமே போக்குவரத்து நடைபெறுகிறது.இதனால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு,எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் அங்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும்சில பொருட்களும் கூட அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.இந்த நிலையில் பரிதவிப்பில் உள்ள யாழ்ப்பாணம் மக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்களை விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாகவோ அல்லது இலங்கையில் உள்ள தமிழ் வியாபாரிகள் மூலமாகவோ இந்தஉதவியைச் செய்ய இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பொருட்களை தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இலங்கை அரசு தமிழ்வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகதெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications