சென்னையில் கேட் வாக் செய்த உலக அழகி
சென்னை:உலக அழகி சுலேகா ரிவெரா சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டார். எய்ட்ஸ்விழிப்புணர்வை வலியுறுத்தி நடந்த அழகிகள் அணிவகுப்பிலும் அவர் கலந்து கொண்டார்.
இந்த ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுலேகா ரிவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ளார். அவர் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார்.
சென்னைக்கு நேற்று வந்த சுலேகா செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,இங்கு வந்தது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தியாவுக்கு வந்துள்ளதை விட இங்கு எய்ட்ஸ் விழிப்புணர்வுபிரசாரத்தில் ஈடுபட வந்துள்ளேன் என்பதுதான் அதிக மகிழ்ச்சி தருகிறது.
அனைவருக்கும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். எய்ட்ஸ் நோயாளிகளை புறக்கணிக்கும்நிலை உள்ளது. இது மாற வேண்டும்.
எய்ட்ஸாலும், எச்ஐவி. வைரஸாலும் பாதிக்கப்பட்டவர்களை அன்பாக பார்க்க வேண்டும், அவர்களிடம்ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும்.
நான் உலக அழகி என்பதால் நான் சொல்வதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதால் எய்ட்ஸ் குறித்தவிழிப்புணர்வுப் பிரசாரத்திற்கு நான் உதவியுள்ளேன். அது எனக்குப் பெருமையாக உள்ளது. இது மிகப் பெரியபொறுப்பு. கடவுளுக்கு நன்றி.
தென்னாப்பிரிக்காவைப் போலவே இந்தியாவிலும் எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வேண்டுமால் முன்னெச்சரிக்கையும், விழிப்புணர்வும் அவசியம் என்றார் சுலேகா.
பின்னர் சுலேகா உள்ளிட்ட பல்வேறு அழகிகள் கலந்து கொண்ட அழகிகள் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது.அதில் சுவேரா கலந்து கொண்டு ஒய்யாரமாக நடந்து வந்தார். பல வெளிநாட்டு அழகிகளும் இதில் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications