மகளுக்கு விசா: நளினி கோரிக்கை நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:மகளுக்கு மாணவர் விசா வழங்க உத்தரவிடக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

இதுதொடர்பாக நளினி தாக்கல் செய்த மனுவில், 1992ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வேலூர் மத்திய சிறையில்எனது மகள் ஆரித்ரா பிறந்தார். இப்போது அவர் இலங்கையில் எனது மாமியார் வீட்டில் வளர்ந்து வருகிறார்.இலங்கையில் இப்போது அமைதி நிலைமை இல்லை. போர்ச் சூழல் நிலவுகிறது.

எனவே எனது மகள் படிப்பதற்காக தமிழகம் வர மாணவர் விசா கோரி இலங்கையில் உள்ள இந்தியத்தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் விசா வழங்க இந்தியத் தூதரகம் தாமதம் செய்து வருகிறது.

இதை வலியுறுத்தி நானும், எனது கணவரும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அப்போதுஎங்களது கோரிககையை பரிசீலிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இன்னும் எனது மகளின் விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே எனது மகளுக்குமாணவர் விசா வழங்க உத்தரவிட வேண்டும்.

எனது மகள் ஆரித்ரா பிறப்பால் இந்தியப் பெண். ஆனால் சூழ்நிலையின் கட்டாயத்தால் இலங்கைக்குஅனுப்பப்பட்டார். அவருக்க இலங்கை பாஸ்போர்ட்டும் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டது என்றுகோரியிருந்தார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வெளியுறவுத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கடந்த ஆண்டு ஆரித்ராவுக்குசுற்றுலா விசா வழங்கப்பட்டது.

3 மாத காலத்திற்கு வழங்கப்பட்ட விசா காலத்திற்கு மேலும் அவர் ஒரு மாதம் கூடுதலாக தங்கியிருந்தார். எனவேதான் ஆரித்ராவுக்கு மாணவர் விசா தர மத்திய வெளியுறவுத் துறை விரும்பவில்லை என்றுதெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளியுறவுத்துறையின் விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம் நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+