பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: டிரைவர் கைது
திருவனந்தபுரம்:பிரதமர் மன்மோகன் சிங் பயணம் செய்த காரை திட்டமிட்ட பாதையில் செலுத்தாமல் வேறு பாதையில் ஓட்டுநர்செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். போலீஸ்அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவுக்கு வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கொலை செய்யப்போவதாக கூறி சமீபத்தில் இ மெயில் மிரட்டல் வந்தது. இதையடுத்து கேரளா முழுவதும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டது. இந்த மிரட்டல் தொடர்பாக ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று திருவனந்தபுரம் வந்தார். விமான நிலையத்தில் ஆளுநர்பாட்டியா, முதல்வர் அச்சுதானந்தன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதன் பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் அழைத்துச் செல்லப்பட்டார். பிரதமரின் கார் திட்டமிட்ட பாதையில்சென்று கொண்டிருந்தபோது ஒரு இடத்தில் திடீரென கார் வேறு பாதையில் திரும்பியது.
இதனால் பிரதமரின் பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பிரமதரின் காரைஅணுகிய அதிகாரிகள் காரை சரியான திசைக்கு திருப்பினர்.
கார் ஆளுநர் மாளிகையை அடைந்ததும் பிரதமரின் காரை செலுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அவரிடம்விசாரணை நடத்தியபோது, அவர் கேரள காவல்துறையைச் சேர்ந்த ஓட்டுநர் இல்லை என்பதும் வாடகைக் கார்ஓட்டுநர் என்பதும் தெரிய வந்தது.
பிரதமரின் பாதுகாப்பில் இவ்வளவு பெரிய குளறுபடி நடந்ததைத் தொடர்ந்து பிரதமரின் பாதுகாப்புப்பொறுப்பில் இருந்த காவல்துறை அதிகாரி பாலச்சந்திரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விளக்க அறிக்கை தருமாறு மாநில டிஜிபிக்கு முதல்வர் அச்சுதானந்தன்உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் கார் பாதை மாறிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications