வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் திமுக: ஜிகே.மணி
சென்னை:உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பாமக கூறிய புகார்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போலதிமுக பதில் அளித்துள்ளதுஎன்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கு நடந்ததேர்தலில் பாமக வேட்பாளர்கள் கணிசமான இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இந்த மனவேதனையைத்தான் பாமக நிறுவனர் ராமதாஸ், வெளிப்படுத்தியிருந்தார்.
இதற்கு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் பதிலளித்துள்ளனர். ஆனால் ராமதாஸின்மையக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்கவே இல்லை.
ஆனால், வெற்றி பெற வைத்துள்ள சில இடங்களைச் சுட்டிக் காட்டி அங்கெல்லாம் வெற்றி பெறவைக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வெற்றி பெற்ற இடங்களைப் பெற்று யாரும் எந்தக்குறையும் சொல்லவில்லை.
எங்களது மனக் குறை எல்லாம், ஏன் இவ்வளவு கணிசமான இடங்களில் தோற்கடிக்கப்பட காரணமாகஇருந்தீர்கள் என்பதுதான். கொடுப்பது போல கொடுத்து விட்டு பிறகு அதை தட்டிப் பறித்துக் கொண்டார்களேஎன்ற கட்சியினரின் ஆதங்கத்தைத்தான் ராமதாஸ் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து முதல்வரோ, அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ பதில் தரவில்லை. இதெல்லாம் சாதாரணமானது,சகஜமானது என்ற தொணியில்தான் அவர்களின் பதில் அமைந்திருக்கிறது.
கூட்டணிக் கட்சியான பாமக தோல்வி அடைந்ததை அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டது எங்களதுதொண்டர்களுக்கு மிகுந்த வருத்தத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு ஜூன் மாதம் கடலூர் மாவட்ட ஊராட்சி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் தோல்விஅடைந்தார். அதற்கு பாமகவைச் சேர்ந்த 2 பேர்தான் காரணம் எனத் தெரிய வந்ததும் இது சகஜம்தான் என்றுநாங்கள் விட்டு வைக்கவில்லை.
துரோகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அந்த நபர்களை கட்சியை விட்டு விலக்கினோம். இன்று வரைஅவர்களை சேர்க்கவில்லை. அந்த நடவடிக்கையை கருணாநிதி அப்போது பாராட்டினார்.
ஆனால் இப்போது கூட்டணி தர்மத்திற்கு விரோதமான போக்கையும், அதன் விளைவாக பாமக வேட்பாளர்கள்பெருமளவில் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையையும் சகஜம்தான் என்று சொல்வது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாக உள்ளது.
எங்களது மன வருத்தத்தை தெரிவித்து விட்டோம். இப்போதும் கூட ஒரு விளக்கத்துக்கு விளக்கம் என்றஅடிப்படையில்தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. இப்பிரச்சினையை இத்துடன் விட்டு விட்டு கட்சிப்பணியாற்றுங்கள் என்று பாமக தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் ஜி.கே.மணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications