பதவி இறக்கம்: சிவனாண்டிக்கு இன்னொரு அடி!
சென்னை:டிஐஜி பதவியிலிருந்து எஸ்.பியாக தன்னை பதவி இறக்கம் செய்ததை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்சிவனாண்டி தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் உளவுப் பிரிவு எஸ்.பியாக இருந்தவர் சிவனாண்டி. இவருக்கு டிஐஜியாக பதவிஉயர்வு கொடுக்கும் வகையில் பணி மூப்புப் பட்டியல் ஒன்றை அதிமுக அரசு தயாரித்தது.
ஆனால் தங்களது பணி மூப்பை பின்னுக்குத் தள்ளி விட்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறி சந்தீப்ராய் ரத்தோர் உள்ளிட்ட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், பதவி உயர்வுப் பட்டியலை ரத்து செய்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம்ஏற்பட்டது. தீர்ப்பாய உத்தரவைக் காரணம் காட்டி சிவனாண்டியை எஸ்.பியாக பதவி இறக்கம் செய்தது திமுகஅரசு.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சிவனாண்டி. இந்த மனுவை விசாரித்தஉயர்நீதிமன்றம், சிவனாண்டியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மீண்டும் தீர்ப்பாயத்தை அணுகிய சிவனாண்டி, தன்னை பதவி இறக்கம் செய்தது செல்லாது என்றுஅறிவிக்கக் கோரி நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத் துணைத் தலைவர்சண்முகம், உறுப்பினர் கணேசன் ஆகியோர் சிவனாண்டியின் மனுவை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications