தமிழகத்துடன் குமரி இணைந்ததன் பொன் விழா
நாகர்கோவில்:தமிழகத்துடன், கன்னியாகுமரி மாவட்டம் இணைந்ததன் பொன் விழா இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின்னர் மொழிவாரியாக மாநிலங்கள் அமைப்பது குறித்து ஆராய நீதிபதி பசல் அலி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
இந்தக் கமிஷன் அளித்த பரிந்துரையின்படி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய புதிய மாநிலங்கள், சென்னைமாகாணத்திலிருந்து பிரித்து உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
அப்போது சென்னை மாகாணத்தில் தெலுங்கு மொழி அதிகம் பேசப்படும் பகுதிகளை உள்ளடக்கிஆந்திராவையும், கன்னடம் அதிகம் பேசப்படும் பகுதிகளை உள்ளடக்கி கர்நாடகத்தையும், மலையாளம் அதிகம்பேசப்படும் பகுதிகளை கொண்டு கேரளாவையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டது.
அப்படி முடிவு செய்யப்பட்டபோது, தமிழர்கள் அதிகம் வசித்த பகுதிகளான தோவாளை, அகஸ்தீஸ்வரம்,கல்குளம், விளவங்கோடு ஆகிய பகுதிகளையும், செங்கோட்டை தாலுகாவையும் தமிழகத்தோடு இணைக்கமுடிவு செய்யப்பட்டது. இவை அனைத்தும் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குள் இருந்தன.
இவற்றை தமிழகத்தோடு இணைக்க மலபார், கொச்சி சமஸ்தானங்கள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்துதமிழகத்தோடு தங்களது பகுதிகளை இணைக்க வேண்டும் என்று கோரி மேற்கண்ட பகுதிகளில் வசித்த தமிழர்கள்போராட்டத்தில் குதித்தனர். அவர்களை மலையாள போலீஸார் தாக்கி ஒடுக்க முற்பட்டனர்.
ஆனால் மார்ஷல் என குமரித் தமிழர்களால் பாசமுடன் அழைக்கப்படும் நேசமணி நாடாரின் தலைமையில்போராட்டம் மிகப் பெரியதாக வெடித்தது. போராட்டத்தை ஒடுக்க மலபார் போலீஸார் பல வகைகளிலும்முயன்றனர். ஆனால் வலுப்பட்டதே தவிர அது ஒடுங்கவில்லை. நேசமணி நாடார், டி.வி.ராமசுப்பய்யர் உள்ளிட்டபலரும் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தால் மலபார், கொச்சி சமஸ்தானங்கள் திகைத்து நின்றன.
இந்த நிலையில் புதுக்கடை என்ற இடத்தில் போராட்டம் நடத்திய தமிழர்கள் மீது மலபார் போலீஸார் நடத்தியதுப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.
இப்படி கடுமையாக போராடி வந்த தமிழர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தமிழர்கள் அதிகம்வசிக்கும் இப்பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க கொச்சி, மலபார் சமஸ்தானங்கள் சம்மதித்தன. இதையடுத்துமொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது இவையும் தமிழகத்தோடு இணைந்தன.
தமிழகத்துடன் ஒருங்கிணைந்த குமரி மாவட்டம் இணைந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டிகுமரி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டள்ளது. அரசு சார்பில் பொன் விழாகொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
புதுக்கடையில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் பல்வேறு தரப்பினரும் மரியாதை செய்து வருகின்றனர்.
கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் ஆண்டுதோறும் இந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.ஆனால் தமிழகத்தில் இதுவரை அப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் முதல் முறையாக இந்தஆண்டு தனித் தமிழ் மாநிலம் அமைந்த நாளாக தமிழக அரசு கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் தமிழ் மாநிலம் அமைந்ததன் பொன் விழா நிகழ்ச்சிநடைபெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications