நாயால் வந்த சண்டை: மேக்கப் மேன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை வட பழனியில் நாய் கத்தியது தொடர்பாக சினிமா மேக்கப் கலைஞர் பிரபு என்பவருக்கும், அவரதுபக்கத்து வீட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. இதுதொடர்பாக பிரபு கைதுசெய்யப்பட்டார்.

வட பழனி வெங்கீஸவரர் காலனியில் வசிப்பவர் பிரபு. சினிமாவில் மேக்கப் கலைஞராக இருக்கிறார். சேரன்இயக்கத்தில் உருவாகும் மாயக்கண்ணாடி படத்தில் அவரது நண்பராக நடித்து வருகிறார்.

இவருக்குப் பக்கத்து வீட்டில் வசிப்பவர் சங்கர். பிரபு தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய்ராத்திரி முழுவதும் கத்திக் கொண்டே இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் சங்கரின் வீட்டார் நிம்மதியாக தூங்கமுடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரபுவிடம் அவர்கள் புகார் கூறியுள்ளனர். ஆனால் அவர், நாய் என்றால் கத்தத்தான் செய்யும் என்றுபதிலளித்துள்ளார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதுகையில் இருந்த ஒரு கம்பியால், சங்கரை பிரபு தாக்கியுள்ளார். அத்தோடு அவரின் தாயாரையும் அடித்துள்ளார்.

இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த நிலையில், சங்கரின்சகோதரி இந்திரா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பிரபு ஏதோ கூறியுள்ளார்.கையால் சைகையும் செய்துள்ளாராம்.

இதுகுறித்து சங்கர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி பிரபுவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+