தெ.ஆ முன்னாள் அதிபர் போத்தா மரணம்
Subscribe to Oneindia Tamil
ஜோகன்னஸ்பர்க்:தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் பி.டபிள்யூ. போத்தா ஜோகன்னஸ்பர்க் நகரில் காலமானார். அவருக்குவயது 90.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி தலைவிரித்தாடிய போது அதிபராக இருந்தவர் போத்தா. இவரது காலத்தில்கருப்பர்களுக்கு எதிராக பெரும் அடக்குமுறை கையாளப்பட்டது.
2000க்கும் மேற்பட்டவர்களை போத்தாவின் பாதுகாப்புப் படை படுகொலை செய்தது. 25,000க்கும்மேற்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.
வெள்ளையர்களின் நிறவெறிக் கொடுமைகளுக்காகவும், நிற வெறி ஆட்சிக்காகவும் மன்னிப்பு கேட்க மறுத்தவர்போத்தா என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கிரேட் குரகொடைல் என்ற செல்லப் பெயரும் உண்டு.












Click it and Unblock the Notifications