கோவையில் கன மழை-பல பகுதிகளில் வெள்ளம்
கோயம்புத்தூர்:கோவை நகரில் நேற்று இரவு பெய்த விடாத கன மழையால் நகரின் பல பகுதிகள்வெள்ளத்தில் மிதக்கின்றன.
கோவையில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரம் மிக பலத்த மழை பெய்தது.இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளமென தேங்கி நின்றது.
காந்தி பூங்கா, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள்தண்ணீர் புகுந்தது.
விமான நிலைய பகுதியில் மட்டும் 12 செமீ மழை பெய்தது. இதனால் நகரின் பலபகுதிகள் நீரில் மிதக்கின்றன. நிாெய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடிக்கொண்டுள்ளது.
அதே போல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் கன மழைபெய்துள்ளது.
மீண்டும் 100ஐ தொட்டது மேட்டூர்:
தமிழகம் முழுக்கவுமே தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைமீண்டும் 100 அடியைத் தொட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணை பலமுறை 100 அடியைத்தாண்டி சாதனை படைத்தது. தொடர்ந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக 100 அடியில்நீர்மட்டம் இருந்து வந்தது.
இந் நிலையில் சமீப நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர்அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. நேற்று காலை 99 அடியாகநீர்மட்டம் இருந்தது. இன்று அது 100 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 14,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்துதண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications