நீதிபதியைக் கண்டித்து தி.க. ஆர்ப்பாட்டம்
சென்னை:தமிழக அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோபாத்யாயாவை கண்டித்துசென்னை உயர்நீதிமன்றம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தி.க. பொதுச் செயலாளர் கி.வீரமணி தலைமையில் உயர்நீதிமன்றம் முன்பு கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.க.வினர்பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட முயன்றனர். அப்போது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். பின்னர்அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக வீரமணி பேசுகையில், உள்ளாட்சி மன்றத் தேர்தல் மோதல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஒருவழக்கு தொடரப்பட்டது. இதில் மாநில தேர்தல் ஆணையர் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கோபாத்யாயாஉத்தரவிட்டார்.
வாக்கு எண்ணும் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த காரணத்தால் அவரால் வர முடியவில்லை.அதற்குப் பதில் தேர்தல் ஆணையரின் செயலாளரான ரங்கராஜ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை அனுப்பி வைத்தார்.அப்போது அந்த அதிகாரியிடம், தேர்தல் ஆணைய தலைவர்தான் வர வேண்டும். அவருடைய பியூன் எல்லாம்வரக் கூடாது என்று நீதிபதி கூறியுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அந்த அதிகாரியை அவமானப்படுத்தும் நோக்கில் இந்த வார்த்தைகளைஅவர் பயன்படுத்தியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர் ஆகியோருக்கும்,தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.
கோபாத்தியாயாவை உடனடியாக வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். தமிழ் பேசத் தெரியாத, தமிழைஅறியாத நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்க கூடாது. இதுதொடர்பாக அடுத்த கட்டமாக நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார் வீரமணி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications